செய்திகள் நாடும் நடப்பும்

‘மெரீனா பீச்’ ஜெயலலிதா நினைவிடத்தில் டிசம்பர் 5–ந் தேதி எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை

சென்னை, நவ.28: அண்ணா தி.மு.க.வுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட புரட்சித் தலைவி அம்மாவின் 9–ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் டிசம்பர் 5–ந் தேதி எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். இதுசம்பந்தமாக அண்ணா தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– ஜெயலலிதா நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 5.12.2016. காலத்தால் அழியாத புரட்சிகரமான பல்வேறு […]

Loading

செய்திகள்

மக்கள் பிரச்சினைகளுக்காக ஆங்காங்கே போராட்டம் நடத்துங்கள் மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி அறிவுறுத்தல்

சென்னை, நவ.26: உள்ளூர் மக்கள் பிரச்சினைகளுக்காக ஆங்காங்கே போராட்டம் நடத்துங்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார். சென்னை அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டமன்றத் தேர்தல் மற்றும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் எடப்பாடிபழனிசாமி பேசியதாவது:-– அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட செயலாளர்கள் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணியை முன்னுரிமை கொடுத்து பணியாற்ற வேண்டும். தங்களது மாவட்டத்தில் […]

Loading

செய்திகள்

கோபிசெட்டி பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி 30–ந் தேதி -பிரச்சாரம்

சென்னை, நவ.24: ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்துடனான எழுச்சிப் பயணத்தைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில் 30–ந் தேதி – ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். சட்டமன்றத் தொகுதி வாரியாக, கடந்த 7.7.2025 முதல் 10.10.2025 வரை, 174 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். இந்தச் சுற்றுப் பயணங்களின்போது, ஆங்காங்கே மக்கள் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சேலத்தில் ஏழை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி : எடப்பாடி வழங்கினார்

சேலம், நவ.17: சேலம் மாநகர் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதி 50-வது வார்டு வட்ட அண்ணா தி.மு.க. செயலாளராக இருப்பவர் பிரேம்குமார். இவர் நடத்தி வரும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சேலம் நெடுஞ்சாலை நகரில் நேற்று நடந்தது. இதில், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முதல் கட்டமாக 12 மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினியை வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர், […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பு

சென்னை, நவ. 17– அரசியல் பரபரப்புக்கிடையே எடப்பாடி பழனிசாமியை ஜி.கே.வாசன் இன்று திடீரென சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழகத்தில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. சட்டசபை தேர்தலை சந்திக்க பிரதான கட்சிகளான திமுக, அதி.முக, ஆகிய கட்சிகளுடன் நடிகர் விஜய்யின் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சியும் களம் இறங்க தயாராகி வருகின்றன. தற்போது ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ், […]

Loading

செய்திகள்

சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியை கண்டித்துசென்னையில் 17–ந் தேதி அண்ணா தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை, நவ.15– சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியை கண்டித்து சென்னையில் அண்ணா தி.மு.க. 9 மாவட்ட செயலாளர்கள் வரும் 17–ந் தேதி (திங்கட்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பட்டியல் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்திற்கு அண்ணா திமுக சார்பில் இதற்கு முழு ஆதரவு வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் திமுக கூட்டணியினர் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 4–ந் தேதி தொடங்கி படிப்படியாக வீடு வீடாக சென்று […]

Loading

செய்திகள்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில்அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகிறார்கள்:எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சேலம், நவ.15-– வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகிறார்கள் என்றும், தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் குளறுபடி நடப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் சென்றார். சேலம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-– பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. சார்பில் 15–ந் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு

சென்னை, நவ.13- பள்ளிபாளையம் நகராட்சி பைபாஸ் சாலையில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி அண்ணா தி.மு.க. சார்பில் நாளை மறுநாள் (15–ந் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-– நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, ஆட்சியில் அமர்ந்த திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, கடந்த 54 மாத காலமாக மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றித் தராமலும்; மக்கள் நிம்மதியுடன் […]

Loading