சேலம் மாநகர் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதி 50-வது வார்டு வட்ட அண்ணா தி.மு.க. செயலாளராக இருப்பவர் பிரேம்குமார். இவர் நடத்தி வரும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சேலம் நெடுஞ்சாலை நகரில் நேற்று நடந்தது.
இதில், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முதல் கட்டமாக 12 மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினியை வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர், மாணவர்கள் அனைவரும் நன்றாக உயர்கல்வி படித்து வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Makkal Kural Official“கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் ‘கர்நாடக ஒலிம்பிக் – 2025’ விருது வழங்கும் விழா நேற்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் சித்தராமையா, விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது பேசிய சித்தராமையா, “காங்கிரஸ் அரசு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 6 […]
Makkal Kural Officialசென்னை, டிச. 31– திராவிட மாடல் ஆட்சி விளையாட்டுத்துறையின் பொற்காலம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அரியலூர், தர்மபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், இராமநாதபுரம், நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களைச் சேர்ந்த 4,824 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலா 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 6,890 டாக்டர் […]
Makkal Kural Officialகாமராஜர் பிறந்த 15-ந் தேதி துவக்கம் சிதம்பரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் சென்னை, ஜூலை.6- மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை காமராஜரின் பிறந்தநாளான வருகிற 15-ந் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்கிறார். தமிழக மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காணும் பணிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அந்த வகையில் அவர், கடந்த மாதம் 16-ந் […]