செய்திகள் நாடும் நடப்பும்

‘கெட் ஃபிட் சென்னை’ நடை , சைக்கிள் பயணம்: பங்கேற்றவர்களுக்கு மா.சுப்பிரமணியன் பரிசு வழங்கினார்

சென்னை, நவ. 17: சென்னை மாநகராட்சியின் சார்பில், தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் இணைந்து சென்னை மாநகர மக்களின் உடல் நலம் மற்றும் மனநலத்தை பேணுகின்ற நலவாழ்வு முயற்சியாக கடந்த 1–ந் தேதி அன்று காலை வேளச்சேரி–தரமணி எம்.ஆர்.டி.எஸ் சாலையில் ‘கெட் பிட் சென்னை’ எனும் நடைபயணம் மற்றும் சைக்கிள் பயணம் நிகழ்வினை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொடங்கி வைத்தார். பங்கேற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். துணை ஆணையாளர் எச். ஆர். கெளஷிக் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சேலத்தில் ஏழை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி : எடப்பாடி வழங்கினார்

சேலம், நவ.17: சேலம் மாநகர் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதி 50-வது வார்டு வட்ட அண்ணா தி.மு.க. செயலாளராக இருப்பவர் பிரேம்குமார். இவர் நடத்தி வரும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சேலம் நெடுஞ்சாலை நகரில் நேற்று நடந்தது. இதில், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முதல் கட்டமாக 12 மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினியை வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர், […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

“உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படக்கூடாது” – பதவி உயர்வில் சமநிலை கோரும் அன்புமணி

சென்னை, நவ. 17: தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமலும், ஒருவேளை பதவி உயர்வு வழங்கப்பட்டாலும் அதற்கான உரிமைகளை வழங்காமலும் திமுக அரசு பாகுபாடு காட்டி வருகிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார். . அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளை பல்கலைக் கழகங்களாக மாற்ற அனுமதிப்பதன் மூலம், அவற்றை அழிக்க முயன்ற அரசு, இப்போது ஆசிரியர்களின் உரிமைகளை பறிப்பதன் மூலம் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

டிஜிட்டல் கைது மூலம் ரூ.33 கோடி மோசடி: பெங்களூரு பெண்ணுக்கு ஏமாற்றம்

பெங்களூரு, நவ. 17: டிஜிட்டல் கைது செய்யப்பட்டதாக கூறி பெங்களூருவைச் சேர்ந்த 57 வயது பெண்ணிடம் ரூ.32 மோசடி நடந்துள்ளது. டிஜிட்டல் கைது தற்போது வளர்ந்து வரும் சைபர் குற்றமாகும், இதில் மோசடி செய்பவர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகள் அல்லது அரசு நிறுவனங்களின் பணியாளர்கள் என்று காட்டிக் கொண்டு ஆடியோ அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுகிறார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து பணம் செலுத்த அழுத்தம் கொடுக்கிறார்கள். இந்நிலையில்,பெங்களூருவைச் சேர்ந்த 57 வயது […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததது: 32 பேர் பலி

கின்ஷாஷா, நவ.17: காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், செப்பு சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, மீட்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் இம்மாத இறுதிக்குள் திறப்பு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை, நவ.17: சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். இன்று சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தின் இறுதி கட்ட பணிகள் குறித்தும், அம்பத்தூர், பானு நகரில் மேம்படுத்தப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் முன்னேற்றப் பணிகள் குறித்தும் மற்றும் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா ஆகிய பணிகளின் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

டிரினிட்டி ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவெல் ஆஃப் இந்தியா–2025

நிகழ்ச்சி நிரல் துவக்கம் மாளவிகா சுந்தர், முரளி ராகவன் இரவு 7.20 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு விருதுகளை வழங்குகிறார். இரவு 8 மணிக்கு பரத நாட்டிய குரு அனிதா குஹா நாட்டியம், கடம் டாக்டர். எஸ். கார்த்திக், 8.20 மணிக்கு வாய்ப்பாட்டு என்.ரவி, சிறப்பு விருந்தினராக டி.எஸ். திருமூர்த்தி கலந்து கொள்கிறார். இரவு 8.45 மணிக்கு மக்கள்குரல் – டிரினிட்டி மிரர் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார் நன்றி கூறுகிறார். விருது பெறுபவர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருது : […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பு

சென்னை, நவ. 17– அரசியல் பரபரப்புக்கிடையே எடப்பாடி பழனிசாமியை ஜி.கே.வாசன் இன்று திடீரென சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழகத்தில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. சட்டசபை தேர்தலை சந்திக்க பிரதான கட்சிகளான திமுக, அதி.முக, ஆகிய கட்சிகளுடன் நடிகர் விஜய்யின் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சியும் களம் இறங்க தயாராகி வருகின்றன. தற்போது ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ், […]

Loading

செய்திகள்

20–ந்தேதி மீண்டும் முதல்வராக பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார்

பாட்னா, நவ. 17– பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை இன்று கவர்னர் ஆரிப் முகமது கானிடம் வழங்கினார். 20–ந்தேதி மீண்டும் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி ஏற்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். நிதிஷ்குமார் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் 17-வது சட்டசபையை கலைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் பதவியை […]

Loading

செய்திகள்

சவூதி அரேபியாவில் பஸ் விபத்து: 42 இந்தியர்கள் பலி

மெக்கா, நவ. 17– டீசல் டேங்கர் லாரி மீது பஸ் மோதிய விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 42 பேர் பலியாகி உள்ளனர்.நெஞ்சை உலுக்கும் இந்த விபத்து சவூதி அரேபியாவில் நடந்துள்ளது. இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட பக்தர்கள் மெக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்றுகொண்டிருந்தனர். இந்நிலையில் மதீனாவுக்கு 160 கி.மீ. தொலைவில் உள்ள முப்ரிஹாத் என்ற இடத்தில் நள்ளிரவு 1.30 (இந்திய நேரப்படி) மணியளவில் டீசல் டேங்கர் லாரியின் மீது பேருந்து மோதி […]

Loading