செய்திகள்

மும்பையில் அக்டோபர் 15, 16 ”சாய்  – தி மியூசிக்கல்” ஆன்மீக இசை, நாடக நிகழ்ச்சி 

Makkal Kural Official

மும்பை, அக். 1 –
புகழ்பெற்ற தயாரிப்பாளர் அஷ்வின் கிட்வானியின் ஏஜிபி வேர்ல்ட் தயாரிப்பில், ”சாய் – தி மியூசிக்கல்” எனும் ஆன்மிக இசை நாடகம் மும்பையில் அக்டோபர் 15 மற்றும் 16 அன்று தேசிய நடனக் கலை அரங்கம் (என்.சி,பி.ஏ) , ஜம்ஷெட் பாபா தியேட்டரில் முதல் முறையாக நடைபெற உள்ளது.

அமைதி மற்றும் நம்பிக்கை என்ற சாய் பாபாவின் போதனைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்த மியூசிக்கல், உலக நம்பிக்கைகளின் எல்லைகளைத் தாண்டி ஆன்மீகத்தை வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஏஜிபி வேர்ல்டின் நிறுவனர் மற்றும் கலை இயக்குநர் அஷ்வின் கிட்வானி, “சாய் – தி மியூசிக்கல்’ என்பது சாதாரண ஒரு கலை நிகழ்ச்சி அல்ல; அது ஆன்மாவின் பயணத்தை பிரதிபலிக்கிறது. இந்தக் கதையை உலகிற்கு கொண்டு செல்லும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த நாடகத்தில் சாய் பாபாவின் குரலுக்கு கலைஞர் கைலாஷ் கேரின் குரல் ஒலிக்கிறது. சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகள், அன்பு மற்றும் சேவை மனப்பாங்கை இசை, நடனம் மற்றும் நடிப்பின் மூலம் பார்வையாளர்களுக்கு ஆழமாக கொண்டு சேர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சியானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இசை நாடகம் அக்டோபர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் மாலை 7 மணிக்கு நடைபெறும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *