செய்திகள்

தங்கம் விலை மீண்டும் ரூ.85 ஆயிரத்தை தாண்டியது

Makkal Kural Official

சென்னை, செப். 27–

சென்னை இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு சவரன் ரூ.85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனிடையே சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் தங்கம் விலை கடந்த 23ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.85,120 என வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. அதற்கு அடுத்த 2 நாட்கள் தங்கம் விலை சற்று குறைந்தது. தொடர்ந்து நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.84,400 என விற்பனையானது.

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.85,000-ஐ கடந்துள்ளது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,640-க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.85,120-க்கு விற்பனை ஆகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 அதிகரித்துள்ளது. இதே போல 24 காரட் தங்கம் ரூ.92,856-க்கும், 18 காரட் தங்கம் ரூ.69,288-க்கும் விற்பனை ஆகிறது.

சென்னையில் நேற்று வெள்ளி ஒரு கிராம் ரூ.153-க்கு விற்பனையானது. இன்று வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.6 என விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.159-க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.6,000 உயர்ந்து, ரூ.1,59,000-க்கு விற்பனை ஆகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *