செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு: 95 ஆயிரத்தை நெருங்குகிறது

Makkal Kural Official

சென்னை, நவ. 28–

சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 94,720க்கு விற்பனை ஆகிறது.

தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் ஆபரண தங்கம், கிராம் 11,800 ரூபாய்க்கும், சவரன், 94,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 176 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் குறைந்து, 11,770 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் சரிவடைந்து, 94,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, நான்கு ரூபாய் உயர்ந்து, 180 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 94,720க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.183க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *