செய்திகள்

சென்னையில் போதைப் பொருள் விற்பனை:

Makkal Kural Official

பெங்களூருவில் பதுங்கியிருந்த 2 வெளிநாட்டு ஆசாமிகள் உள்பட 3 பேர் கைது

சென்னை, டிச. 8–

வானகரம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த வழக்கில் 8 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்பில் இருந்த சூடான் மற்றும் நைஜீரியா நாட்டைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டன.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு சென்னை பெருநகரில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகளையும், வலைபின்னல் தொடர்புகளில் உள்ளவர்களையும் கண்டறிந்து கைது செய்து, உரிய நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.

போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், வானகரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, போரூர் டோல்கேட், சர்வீஸ் ரோட்டில் கண்காணித்து, அங்கு போதைப்பொருள் வைத்திருந்த 3 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 13 கிராம் மெத்தம்பெட்டமைன், 150 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து, மூவரும் நீதிமின்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், மேலும் 5 நபர்களை கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, வானகரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு இந்த வழக்கில் தொடர்புடைய சூடான் நாட்டைச்சேர்ந்த மொஹந்த் மோவியா அப்துல் ரஹ்மான் அல்டீராப்ஸ் (24), நைஜீரியா நாட்டைச்சேர்ந்த நாஜி லோடச்சுக்வு இம்மானுவேல் (27) ஆகிய இருவரை கர்நாடக மாநிலம் பெங்களூரில் கைது செய்தனர்.

இது வரை போதைப்பொருளுக்கு எதிரான சென்னை பெருநகர காவல் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் குழுவினர் தொடர் நடவடிக்கையில் நைஜீரிய நாட்டைச்சேர்ந்த 26 நபர்களும், கேமரூன் நாட்டைச்சேர்ந்த ஒருவரும், சூடான் நாட்டைச்சேர்ந்த இருவர் என மொத்தமாக 29 வெளிநாட்டவர்கள் போதைப்பொருள் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூளைமேடு

இதே போல் சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், சூளைமேடு, வீரபாண்டி நகர் முதல் தெரு சந்திப்பு அருகே கண்காணித்து, அங்கு மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்தத 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை தேடிவந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கிருந்த அவினாஷ் (எ) வாசுதேவன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 15 கிராம் கஞ்சா மற்றும் 2 கிராம் OG கஞ்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *