செய்திகள்

அம்பத்தூரில் கஞ்சா கடத்தல்: பெண் கைது

Makkal Kural Official

ஆவடி, அக். 11–

அம்பத்தூர் பகுதியில் கஞ்சா கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி காவல் ஆணையரகத்தில் போதைப்பொருள் இல்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவுபடியும், கூடுதல் ஆணையாளர் பவானீஸ்வரி, அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆணையாளர் வழிகாட்டுதலின் படியும் செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் மீஞ்சூர், செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா எனும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மொண்டியம்மன் சோதனை சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு சந்தேகப்படும் படியாக இருந்த பெண்ணை சோதனை செய்த போது அவரிடம் சுமார் 11.5 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உசிலம்பட்டியைச் சேர்ந்த திவ்யா என்பவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி குற்றவியல் நடுவர்-2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *