நாட்டு வெடிகுண்டு தயாரித்து ‘இன்ஸ்டா'வில் பதிவிட்ட 4 ரவுடிகள் கைது
செய்திகள்

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ‘இன்ஸ்டா’வில் பதிவிட்ட 4 ரவுடிகள் கைது

விழுப்புரம், ஜூலை 5– நாட்டு வெடிகுண்டு தயாரித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட நான்கு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம், பர்கத் நகர்,வாட்டர் டேங்க் அருகே உள்ள தோப்பில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அங்கு பதுங்கியிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அதில், அவர்களிடம் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள், சணல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இருந்தது. […]

Loading

செய்திகள்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி

சென்னை, ஜூலை 5– சென்னையில் ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடந்தது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ந் தேதி சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டாா். தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுவரை 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையில் அவரின் நினைவிடம் அமைந்துள்ள சென்னையை அடுத்த பொத்தூரில் அவருக்கு […]

Loading

செய்திகள்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

சாத்தூர், ஜூலை 5– விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 1-ம் தேதி காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி -அருகே சின்னகாமன்பட்டியில், கமல்குமார் என்பவருக்கு சொந்தமான, ‘கோகுலேஷ்’ பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில், 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்த ஆலையில் 1–ந் தேதி காலை 8.30 மணி அளவில் தொழிலாளர்கள் மருந்து கலவை செய்யும் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை உயர்வு: சவரன் ரூ.72,480க்கு விற்பனை

சென்னை, ஜூலை 5– தங்கம் விலை இன்று உயர்ந்து, சவரன் ரூ.72,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்து கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 14ந்தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், சவரனுக்கு ரூ.74,560 என விற்பனையானது. அதன் பின்னர் […]

Loading

கதைகள் சிறுகதை

கனவு மெய்ப்பட வேண்டும் – மு.வெ. சம்பத்

தனது தோழிகள் மேல் படிப்பிற்காக அவரவர் விரும்பிய துறைகளில் சேர்ந்தார்கள், மாலா தனது தந்தை மோகனிடம் தான் ஆட்டிசம் துறையில் படிக்க விரும்புவதாக் கூற, உனது தோழிகள் போன்று நீயும் படிக்கலாமே என்றார், வீட்டில் குணசீலன் ஆட்டிசத்தினால் அவதிப் படுகிறானே, அவனை குணப் படுத்தவா இந்தத் துறையை நீ விரும்புகிறாய் என்றார், உனது வாழ்க்கையை மேம்படுத்தும் துறையை எடுத்தால் என்ன என்று கூற, மாலாவின் பிடிவாதம் இறுதியில் வென்றது, மிகவும் ஆர்வமாக படித்த மாலாவை ஆசிரியர் மருத்துவர் […]

Loading

செய்திகள்

ரூ.1 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் வாங்கும் இந்தியா

பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் புதுடெல்லி, ஜூலை.4-– ரூ.1 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் இந்தியா வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய முப்படைகளை வலுப்படுத்த மிகப்பெரிய அளவில் ராணுவ தளவாடங்களை இந்தியா கொள்முதல் செய்து வருகிறது. அந்தவகையில் 10 மிகப்பெரிய கொள்முதல் பரிந்துரைகளுக்கு ராணுவ அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த ராணுவ கெள்முதல் கவுன்சில் கூட்டத்தில் மொத்தம் ரூ.1.05 லட்சம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு ஒப்புதல் […]

Loading

செய்திகள்

குப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தையின் உடல்

வாயில் கவ்வி கொண்டு ஓடிய தெரு நாய் அரியலூர் அருகே நடந்த பரபரப்பு சம்பவம் அரியலூர், ஜூலை 4– குப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தையின் உடலை தெரு நாய் வாயில் கவ்வி கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆர்.எஸ். மாத்தூர் கிராமம் உள்ளது. இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தின் பின்புறம் உள்ள குப்பை மேட்டில் பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடந்துள்ளது. […]

Loading

செய்திகள்

ஜப்பானில் 2 வாரங்களில் மட்டும் 900 முறை நில நடுக்கம் பதிவு

டோக்கியோ, ஜூலை 4– ஜப்பானின் டோகாரா தீவுகளுக்கு அருகே கடந்த 2 வாரங்களில் 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் இருப்பதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. ஜப்பானின் தெற்கு பகுதியிலுள்ள டோகாரா தீவுகளுக்கு அருகே கடந்த 2 வாரங்களில் 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் 183 நிலநடுக்கம் இது குறித்து ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, “ஜூன் 21 முதல் தொடங்கிய […]

Loading

செய்திகள்

ஆனித்திருமஞ்சனம்: சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்

சிதம்பரம், ஜூலை 1 சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிதம்பரத்தில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜர் கோவிலில் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் தொடங்கியது. விழாவின் 9ம் நாளான இன்று தேர்த்திருவிழாவை முன்னிட்டு சிற்சபையில் உள்ள மூலவர்களான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் […]

Loading