சென்னை, ஜூலை 16– மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 3–ந் தேதி முதல் 13–ந் தேதி வரை 4–வது ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் (அலைச்சறுக்கல்) தமிழ்நாடு போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டி இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அலைச்சறுக்கு விளையாட்டில் (சர்ஃபிங்கில்) தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 20 நாடுகள் பங்கேற்க உள்ளன. இந்த சர்வதேச போட்டியில் சுமார் 150 விளையாட்டு வீரர்கள் போட்டியிட உள்ளார்கள். […]
![]()


