கனமழை
செய்திகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலி

நியூயார்க், ஜூலை 6– அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு – மத்திய டெக்சாஸில் உள்ள குவாடலூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட வெள்ளபெருக்கில் பலர் அடித்து செல்லப்பட்ட நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 32 பேர் வெள்ளத்தில் பலி மேலும் வெள்ளப்பெருக்கு […]

Loading

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு
செய்திகள்

திருச்செந்தூரில் நாளை குடமுழுக்கு: குவியும் பக்தர்கள்

டிரோன் மூலம் புனிதநீர் தெளிக்க ஏற்பாடு தூத்துக்குடி, ஜூலை.6- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை நடைபெறவிருக்கும் குடமுழுக்கை காண்பதற்காக பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனிதநீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு […]

Loading

செய்திகள்

பெண் போலீசாரை பொதுவான பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தாதது ஏன்? டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விளக்கம்

சென்னை, ஜூலை.6- பெண் போலீசாரை பொதுவான பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தாதது ஏன்? என்பது குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-– தமிழக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் கடந்த 30.6.2025 அன்று காணொலி வாயிலாக மாவட்ட மற்றும் மாநகர காவல் அதிகாரிகளுடன் நடத்திய கலந்தாய்வின்போது, பாதுகாப்பு பணிகளுக்கு அதிக பெண் போலீசாரை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார். ‘போக்சோ’ குற்றங்கள் மற்றும் […]

Loading

செய்திகள்

நிரவ் மோடியின் சகோதரர் அமெரிக்காவில் அதிரடி கைது

புதுடெல்லி, ஜூலை.6-– பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி வங்கிக்கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு உள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரிகளான நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் நாட்டை விட்டு தப்பி ஓடினர். இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக்கடன் மோசடிகளில் ஒன்றாக கருதப்படும் இந்த விவகாரத்தில் […]

Loading

யானை தந்தத்தை விற்க முயன்ற 8 பேர் கைது
செய்திகள்

ரூ.2 கோடி மதிப்பிலான யானை தந்தத்தை விற்க முயன்ற 8 பேர் கைது

செங்கல்பட்டு, ஜூலை.6- ரூ.2 கோடி மதிப்பிலான யானை தந்தத்தை கடத்தி விற்க முயன்ற பெண் உள்பட 8 பேரை செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே வனத்துறையினர் கைது செய்தனர். சென்னை ஜமாலியா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 57). இவர் கடந்த 1983-ம் ஆண்டு நைஜீரியா நாட்டுக்கு வேலைக்காக சென்றார். அப்போது, அங்கு யானை தந்தம் கடத்தலில் ஈடுபட்ட அந்த நபர், அங்கிருந்து 2 யானை தந்தங்களை தமிழகத்துக்கு கடத்தி வந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதை […]

Loading

மும்பையில் இந்தி எதிர்ப்பு போராட்டம்
செய்திகள்

மும்பை இந்தி எதிர்ப்பு பேரணி எழுச்சியும் உற்சாகமும் தருகிறது: ஸ்டாலின்

சென்னை, ஜூலை.6- மும்பையில் நடந்த இந்தி எதிர்ப்பு வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடம் புகட்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்ப தாவது:-– இந்தி திணிப்பை முறியடிக்க தி.மு.க.வும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப்போர், மாநில எல்லைகளைக் […]

Loading

தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை
செய்திகள்

கனமழை எச்சரிக்கை: தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’

புது டெல்லி, ஜூலை 6 – நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை காரணமாக, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, பீகார், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. இந்திய வானிலை மையம் (IMD) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, அடுத்த 3 நாட்களுக்கு குறைந்தது 6 மாநிலங்களில் கனமழையும் புயல் வீசும் சாத்தியமும் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொங்கண் […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

அறுவடைத் திருவிழா…! – ராஜா செல்லமுத்து

செங்கமங்கலாக இருந்தது, வானம்.படுக்கையில் இருந்து எழுந்த மூக்கம்மாள், வீட்டின் கடை மடையில் இருந்த பானையில் தண்ணீரை எடுத்து வாயைக் கொப்பளித்தாள். வெற்றிலை போட்டுப் போட்டுக் கரையாய் போன தன் பற்களை எவ்வளவு நாள் பல் தேய்த்தும் அந்தச் சிவப்புக் கறை அவள் பற்களை விட்டு தீர்ந்தபாடில்லை என்ற வருத்தத்தில் வீட்டு முற்றத்தில் வளர்ந்திருந்த மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த எரிந்த வறட்டிச் சாம்பலை தன் இடது கையில் கொட்டி, வலது ஆட்காட்டி விரலில் தொட்டு விருட்டு, விருட்டு என்று பல் […]

Loading

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ‘இன்ஸ்டா'வில் பதிவிட்ட 4 ரவுடிகள் கைது
செய்திகள்

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ‘இன்ஸ்டா’வில் பதிவிட்ட 4 ரவுடிகள் கைது

விழுப்புரம், ஜூலை 5– நாட்டு வெடிகுண்டு தயாரித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட நான்கு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம், பர்கத் நகர்,வாட்டர் டேங்க் அருகே உள்ள தோப்பில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அங்கு பதுங்கியிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அதில், அவர்களிடம் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள், சணல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இருந்தது. […]

Loading

செய்திகள்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி

சென்னை, ஜூலை 5– சென்னையில் ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடந்தது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ந் தேதி சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டாா். தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுவரை 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையில் அவரின் நினைவிடம் அமைந்துள்ள சென்னையை அடுத்த பொத்தூரில் அவருக்கு […]

Loading