செய்திகள்

மெரினா கடற்கரையில் தேசிய கொடி ஏற்றினார் கவர்னர்

சென்னை, ஜன. 26– நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே நடந்த கோலாகல விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். காலை 7.52 மணிக்கு விழாப்பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தடைந்தார். காரின் முன்னும் பின்னும் […]

Loading

செய்திகள்

கனிமொழிக்கு ஸ்டாலின் அமித்ஷா, விஜய் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, ஜன.5– தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்தி்ய உள்துறை அமைச்சர் அமித்ஷா, த.வெ.க. தலைவர் விஜய் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யு.மான கனிமொழி இன்று தனது 58 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு கனிமொழிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை […]

Loading

செய்திகள்

எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது கிறிஸ்துமஸ் விழாவில் ஸ்டாலின் பேச்சு

சென்னை, டிச.24-– ஜனநாயகத்தில் வலிமை மிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து இருக்கும் போது எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை பெரம்பூர் டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நடைபெற்ற, “கிறிஸ்துமஸ் பெருவிழா”-வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-– கிறிஸ்துமஸ் என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய […]

Loading

செய்திகள்

1,000 அரங்குகளுடன் சென்னையில் 49–வது புத்தகக்காட்சி

ஜனவரி 8–ந் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் சென்னை, டிச.21- 1,000 அரங்குகளுடன் நடைபெற உள்ள சென்னை புத்தகக்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 8-–ந்தேதி தொடங்கி வைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் ஆர்.எஸ். சண்முகம், துணைத் தலைவர் நக்கீரன் கோபால், இணைச் செயலாளர் நந்தா, உதவி இணை செயலாளர் ஆடம் சாக்ரடீஸ் மற்றும் பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் நிருபர்களிடம் […]

Loading

செய்திகள்

‘‘மாநில உரிமை, உண்மையான கூட்டாட்சியை நிலைநாட்டும் போராட்டம் தொடரும்’’: ஸ்டாலின்

‘‘கவர்னர்களுக்கு காலக்கெடு; அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் வரை ஓயமாட்டோம்’’ சென்னை, நவ. 21– மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்! குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள விளக்கங்கள் ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த […]

Loading

செய்திகள்

ரூ.61.74 கோடியில் விருதுநகரில் சாலை மேம்பாலம் : ஸ்டாலின் திறந்தார்.

சென்னை, நவ. 11– நெடுஞ்சாலைத் துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் ரூ.61.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 98 இளநிலை வரைதொழில் அலுவலர் உள்ளிட்ட 120 பணியிடங்களுக்கு 98 இளநிலை வரைதொழில் அலுவலர், 14 உதவியாளர் மற்றும் 8 தணிக்கை உதவியாளர் என தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை அவர் வழங்கினார். விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி – விருதுநகர்- அருப்புக்கோட்டை-திருச்சுழி-நரிக்குடி- […]

Loading

செய்திகள்

முத்துராமலிங்கத் தேவர் 118வது பிறந்த நாள்: நினைவிடத்தில் நாளை காலை முதல்வர் மலர் தூவி மரியாதை

சென்னை, அக்.29– பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118–வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் 30–ந் தேதி அன்று காலை 9.30 மணியளவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்கள். அதே நேரத்தில், சென்னை, அண்ணா சாலை, நந்தனம் சந்திப்பில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவச்சிலைக்கு 30–ந் தேதி அன்று காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள், […]

Loading

செய்திகள்

உலக சிக்கன நாள்: சிக்கனம் கடைப்பிடிப்போம்; சிறப்பாக வாழ்வோம்’: ஸ்டாலின் வாழ்த்து

நாளை (30–ந் தேதி) உலகசிக்கனநாள். இதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:– சிக்கனம் கடைப்பிடிப்போம், சேமிப்போம், சிறப்பாக வாழ்வோம். ஆண்டுதோறும் அக்டோபர் 30–ம் நாள் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் “உலக சிக்கன நாளாக” கொண்டாடப்பட்டு வருகிறது. வருவாயை உயர்த்தியும், செலவுகளை களைந்தும் திறம்பட வாழவேண்டும் என்பதை திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகப் பொதுமறையாம் திருக்குறளில், ‘வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை ஆராய்வான் செய்க வினை’ ‘வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் […]

Loading

செய்திகள்

முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் ஸ்டாலின்: எடப்பாடி கடும் தாக்கு

சென்னை, அக்.28– எதற்காக முதலமைச்சரானோம் என்பதை மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:– நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன். ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலினின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது.திரைப்படங்களைப் பார்ப்பதிலோ, திறமையான திரைப்பட குழுவினரை […]

Loading

செய்திகள்

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் தீர்வை நோக்கி பயணிப்போம்: ஸ்டாலின்

சென்னை, அக். 4– கரூர் சம்பவத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் நீண்ட கால தீர்வை நோக்கி பயணிப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:– கரூர் துயரம் குறித்து உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது. கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து […]

Loading