செய்திகள்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

வேளாங்கண்ணி, ஆக. 30-– வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மாதாவின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாதா உருவம் பொறித்த வண்ணக்கொடி பேராலய முகப்பிலிருந்து மாலை 5.45 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பேராலய வளாகம், கடற்கரைசாலை, ஆரியநாட்டுத்தெரு […]

Loading