செய்திகள்

விழுப்புரம் வந்த ஸ்பிக் உர மூட்டைகள்: கலெக்டர் ஆய்வு

விழுப்புரம், நவ. 18– விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் இரயில் நிலையத்திற்கு, தூத்துக்குடி இரயில் நிலையத்திலிருந்து சரக்கு இரயில் மூலம் வந்தடைந்த ஸ்பிக் SPIC நிறுவன உர மூட்டைகளை மாவட்ட கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு ஸ்பிக் உர நிறுவனத்தின் 1299 மெ.டன் உரமூட்டைகள் வந்தடைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடிக்கான […]

Loading

செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை: கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு

விழுப்புரம், நவ. 17–- வடகிழக்கு பருவ மழையையொட்டி வானூர் தாலுகா பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதையொட்டி வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள பி.டி.ஓ., அலுவலகத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பருவமழை அதிகரிக்கும் போது திடீரென சாலைகளில் உள்ள மரம் முறிந்து போக்குவரத்து தடை ஏற்பட்டால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும், மழைக்காலத்தில் பொதுமக்களை பத்திரமாக பாதுகாக்க […]

Loading

செய்திகள்

விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சிறுத்தை: வாகனம் மோதி பலி

விழுப்புரம், நவ. 5– விழுப்புரம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சிறுத்தை அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் உள்ள மேம்பாலப் பகுதியில் (சென்னை – -திருச்சி தேசிய நெடுஞ்சாலை) நேற்று நள்ளிரவில் சிறுத்தை ஒன்று சாலையைக் கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிச் சென்றதில் சிறுத்தை சம்பவ இடத்திலேய உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து அந்த வழியாகச் […]

Loading

செய்திகள்

அன்புமணியுடன் எதுவும் பேசவில்லை: ராமதாஸ்

விழுப்புரம் பட்டானூரில் திட்டமிட்டபடி நாளை சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும், வதந்திகளை நம்பாதீர்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் ராமதாசின் மனைவி சரஸ்வதியின் பிறந்தநாள் என்பதால் அன்புமணி ராமதாஸ், தனது தாயார் சரஸ்வதியுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். தாயாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராமதாசுடன் அன்புமணி பங்கேற்ற […]

Loading

செய்திகள்

தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்புக்கு வந்த 11-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரம், ஆக. 13– விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்புக்கு வந்த 11-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்ததை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தான். விழுப்புரம் மேல்தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மோகன்ராஜ் (17). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை 7 மணியளவில் சிறப்பு வகுப்பிற்காக வழக்கம்போல் வீட்டில் இருந்து மோகன்ராஜ் பள்ளிக்கு வந்தார். பின்னர் பள்ளி வளாகத்தின் […]

Loading

செய்திகள்

குடும்ப அரசியலை விமர்சித்த நான் தற்போது வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன்’’: வைகோ புலம்பல்

விழுப்புரம், ஜூலை 18– குடும்ப அரசியலை விமர்சித்த நான், தற்போது வாரிசு அரசியல் என்ற பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் என, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசினார். விழுப்புரம், ஆனந்தா மண்டபத்தில் ம.தி.மு.க., மண்டல செயல்வீரர்கள் கூட்டம் நேற்று இரவு நடந்தது. அக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: தமிழகத்தின் முக்கிய அரசியல் கால கட்டங்களில் ம.தி.மு.க., செத்துவிட்டதென ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்து விவாதங்கள் நடக்கிறது. ஆனால், கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்கள் அதனை பொய்யாக்கி, 31 ஆண்டுகளாக காத்து […]

Loading

செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டை

விழுப்புரம், ஜூலை 10– விழுப்புரத்தில் 17 தூய்மை பணியாளர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் நிதியுதவி மற்றும் 105 தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளை தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி, கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், தூய்மைப்பணியாளர்களின் பணி அர்ப்பணிப்பு மிக்க பணியாக உள்ளது. குறிப்பாக, கொரோனா போன்ற போிடர் காலத்தில், தங்கள் உயிரை துச்சமென எண்ணி தூய்மைப்பணியினை சிறப்பாக மேற்கொண்டு […]

Loading