ஈரோடு, டிச.10: ஈரோட்டில் விஜய் பிரசாரத்துக்கு 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளதால், த.வெ.க. பொதுக்கூட்டத்தை 2 நாட்கள் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுவரை இல்லாத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் த.வெ.க. சார்பில் விஜய் பிரச்சார கூட்டம் வருகிற 16-ந் தேதி நடைபெற இருந்தது. இந்த நிலையில் பிரச்சார கூட்டம் 18-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக 19 ஏக்கர் பரப்பளவில் இடம் […]
![]()




