செய்திகள்

ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் ; தனி நீதிபதியின் உத்தரவு ரத்து

சென்னை, ஜன. 27– நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. மேலும், இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி பி.டி. ஆஷா விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவருமான விஜய், ‘ஜன நாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தை கே.வி.என். புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படத்துக்கு தணிக்கை சான்று […]

Loading

செய்திகள்

குடியரசு தினத்தில் அரசியலமைப்பு உறுதி தவெக தலைவர் விஜய்

சென்னை, ஜன.26– ‘அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம்’ என தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் – நடிகர் விஜய் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், ‘வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியக் குடியரசு உருவாகக் காரணமான அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுவோம். […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

விஜய்யின் ‘விசில்’ தமிழ்நாட்டு அரசியலில் புதிய சங்கநாதம்?

தமிழ்நாடு அரசியலின் மேடையில் சினிமாவும் அரசியலும் பின்னிப்பிணைந்து இருக்க, புதிய அத்தியாயம் துவக்கும் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க கட்சிக்கு, ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களால், ஒரு “மாஸ்டர் ஸ்ட்ரோக்” என மகிழ்கின்றனர். தேர்தல் ஆணையத்திற்கு அது ஒரு சின்னம், அவர்கள் பட்டியலில் உள்ள ஓர் இலவச அடையாளம். “Whistle Podu” என்ற கீதத்துடன் இணைந்த ரசிகர் வெறியாட்டம், விஜய் கட்சியினர் மத்தியில் துவங்கி விட்டது! திரையரங்கின் முதல் நாள், முதல் காட்சியின் மகிழ்ச்சி குதூகலம் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

விஜய்யின் த.வெ.க. கட்சிக்கு ‘விசில்’ சின்னம்

விஜய்யின் த.வெ.க. கட்சிக்கு தேர்தல் கமிஷன் ‘விசில்’ சின்னம் வழங்கியுள்ளது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இந்திய தேர்தல் கமிஷன் தேர்தல் ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளது. பல்வேறு பணிகளை அது முன்னெடுத்து இருந்தாலும், தேர்தல் கமிஷனில் பதிவு பெற்ற, அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணியையும் […]

Loading

செய்திகள்

விஜய் தலைமையில் 25-ந்தேதி தவெக செயல்வீரர்கள் கூட்டம்: தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை

சென்னை, ஜன. 22– தவெக தலைவர் விஜய் தலைமையில் வருகிற 25-ந்தேதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகிறது. கடந்த சில நாட்களாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் தேர்தல் பிரச்சார குழு கூட்டங்கள் நடந்தன. அதே நேரத்தில் கடந்த டிசம்பர் 18-ந்தேதி ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்புக்கு […]

Loading

செய்திகள்

புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்: அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை

புதுடெல்லி, ஜன. 12– கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக […]

Loading

செய்திகள்

விஜய் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறியுள்ளார்; அவரை சந்தித்தது உண்மை

காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி சென்னை, ஜன. 7– விஜய்யை சந்தித்தது உண்மைதான். அவர் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறியுள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார். தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர் திமுகவுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் எதிராகவும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. மேலும் சில காங்கிரஸ் நிர்வாகிகள் […]

Loading

செய்திகள்

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு U/A சான்றிதழ்

சென்னை, ஜன. 6: ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் 9ந் தேதி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் நேற்றுவரை தணிக்கைக் குழு, இப்படத்திற்கு சான்றிதழ் வழங்கவில்லை. ஆனால் U/A சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கிறது. (12 வயதுக்குட்பட்ட சிறுவர் – சிறுமிகள் பெற்றோர்களோடு தான் பார்க்க அனுமதி) தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த இழுபறியால், திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு வெய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. படம் […]

Loading

செய்திகள்

விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்த காமராஜர் பேத்தி மயூரி கண்ணன்

சென்னை, ஜன.6- காமராஜர் பேத்தி உள்ளிட்ட பலர், விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தனர். த.வெ.க.வில் பல்வேறு கட்சியினர் இணைந்து வருகின்றனர். நேற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தனர். இதற்காக, த.வெ.க. தலைவர் விஜய் பகல் 1 மணியளவில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அவரை கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்றார். அதனைத்தொடர்ந்து, த.வெ.க.வில் இணைந்த பிரபலங்களுடன் விஜய் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். த.வெ.க.வில் இணைந்தவர்கள் விவரம் வருமாறு:- தஞ்சாவூர் மத்திய […]

Loading

செய்திகள்

கனிமொழிக்கு ஸ்டாலின் அமித்ஷா, விஜய் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, ஜன.5– தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்தி்ய உள்துறை அமைச்சர் அமித்ஷா, த.வெ.க. தலைவர் விஜய் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யு.மான கனிமொழி இன்று தனது 58 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு கனிமொழிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை […]

Loading