செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்காவில் நடுவானில் 2 ஹெலிகாப்டர்கள் மோதல்: விமானி உயிரிழப்பு

வாஷிங்டன், டிச. 29: அமெரிக்காவில் நடுவானில் 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்ட விபத்தில் விமானி உயிரிழந்தார். அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹேமண்டன் விமான நிலையத்திற்கு அருகில் 2 ஹெலிகாப்டர்கள் எதிர்பாராத விதமாக நடுவானில் மோதிக்கொண்டன. விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகாப்டர்கள் தரையில் விழுந்து தீப்பற்றி எரியத் தொடங்கின. இந்த சம்பவத்தில் ஒரு ஹெலிகாப்டர் விமானி உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து […]

Loading

செய்திகள்

இந்தியா–பாகிஸ்தான் அணு ஆயுதப்போரை தடுத்து ஒரு கோடி பேர் உயிரை காப்பாற்றினேன் அதிபர் டிரம்ப்

வாஷிங்டன், டிச. 23– இந்தியா–பாகிஸ்தான் அணு ஆயுதப்போரை தடுத்து இதுவரை 1 கோடி பேர் உயிரை காப்பாற்றி உள்ளேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். நான் இன்னும் தீர்க்காத ஒரே போர் ரஷ்யா–உக்ரைன் போர் மட்டும் தான் என்றும் கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ரஷ்ய அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு இடையே பெரும் பகை உள்ளது. […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், டிச. 18: அமெரிக்காவின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தலா ரூ.1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சேவை மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில், ’வீரர்களுக்கான ஈவுத்தொகை’ வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:– “நான் பதவிக்கு வந்த முதல் நாளிலேயே, நாட்டின் தெற்கு எல்லையில் நடந்த ஊடுருவலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்தேன். கடந்த 7 மாதங்களாக ஒரு வெளிநாட்டினர் கூட சட்டவிரோதமாக […]

Loading

செய்திகள்

காசாவில் தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல்: அதிபர் டிரம்ப் தகவல்

வாஷிங்டன், அக்.5– காசாவில் தாக்குதலை தற்காலிகமாக இஸ்ரேல் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். காசா அமைதி திட்டத்தை ஹமாஸ் நடைமுறைப்படுத்திய உடனே காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார். மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் – காசா இடையிலான போரை நிறுத்துமாறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இருப்பினும், இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி […]

Loading

செய்திகள்

புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே எச்–1பி விசா கட்டண உயர்வு பொருந்தும்

வாஷிங்டன், செப்.21– எச்–1பி விசாவுக்கான கட்டணம் ஒருமுறை மட்டுமே செலுத்தக் கூடிய கட்டணம் என்று அமெரிக்கா விவரித்துள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த எச்–1 பி விசா கட்டண உயர்வு (ஓராண்டு கட்டணம் ரூ.88 லட்சம்) இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த கட்டண உயர்வு பற்றி பல்வேறு சந்தேகங்கள், முரண்பாடான தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது இந்த விசாவை வைத்திருக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்த கட்டண உயர்வு என்பது புதிய விசா கோரும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் குஜராத்தி பெண் சுட்டுக்கொலை; 21 வயது வாலிபர் கைது

வாஷிங்டன், செப். 21– அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் குஜராத்தி பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 21 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் தென் கரோலினாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிரண் படேல் என்ற குஜராத்தி பெண் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். கடந்த 16ம் தேதி கிரண் படேல் பெட்ரோல் பங்கில் பணத்தை எண்ணி கொண்டிருந்போது அங்கு வந்த ஒரு நபர் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். பின்னர் கிரண் படேலை சுட்டுவிட்டு அந்த நபர் […]

Loading

செய்திகள்

போரை 50 நாளில் நிறுத்தாவிட்டால் ரஷ்யாவுக்கு எதிராக 100 சதவீத வரி

அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை வாஷிங்டன், ஜூலை 15– அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வாஷிங்டனில் நேற்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டுடன் நடந்த சந்திப்பில், உக்ரைனுடனான போரை 50 நாட்களுக்குள் நிறுத்தாவிட்டால் ரஷ்யாவுக்கு எதிராக 100 சதவீத ‘இரண்டாம் நிலை வரி’ (secondary tariffs) விதிக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றமின்மை குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய டிரம்ப், உக்ரைனுக்கு ‘உயர்தர’ ஆயுதங்களை, நேட்டோ நாடுகளின் செலவில், […]

Loading

செய்திகள்

டாலர் தான் ராஜா; அதனை அழிக்க பிரிக்ஸ் அமைப்பு முயற்சிக்கிறது: அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன், ஜூலை 9– அனைத்து நாடுகளுக்குமான வர்த்தகத்துக்கு ”டாலர் தான் ராஜா. அதனை பிரிக்ஸ் அமைப்பு அழிக்க முயற்சி செய்கிறது. கடும் விளைவுகளை அந்த அமைப்பு சந்திக்க நேரிடும்” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நிருபர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:– பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் யாராக இருந்தாலும், விரைவில் 10 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும். அமெரிக்காவை காயப்படுத்தவே பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. நமது […]

Loading

செய்திகள்

1 கோடியே 60 லட்சம் அமெரிக்க மக்களை அபாயத்தில் தள்ளும் டிரம்ப்: ஒபாமா எதிர்ப்பு

வாஷிங்டன், ஜூலை 3– மெடிக்எய்டு திட்டத்திற்கான நிதியை, குறைக்கும் வகையிலான மசோதாவை டிரம்ப் நிர்வாகம் நிறைவேறினால், 1 கோடியே 60 லட்சம் அமெரிக்கர்கள் அபாயத்தில் தள்ளப்படுவார்கள் என்று முன்னாள் அதிபர் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார். டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ள புதிய மசோதா, மெடிக்எய்டு (Medicaid) எனப்படும் மருத்துவ உதவி திட்டத்திற்கு அரசு வழங்கும் நிதியைக் குறைப்பதோடு, முந்தைய ஒபாமா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மலிவு விலை பராமரிப்புச் சட்டத்தை (Affordable Care Act) பலவீனப்படுத்துவதாக உள்ளது. எனவே, […]

Loading

செய்திகள்

காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்: டிரம்ப்

வாஷிங்டன், ஜூலை 2– காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்தை இறுதி செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் இணைந்து நாங்கள் பணியாற்றுவோம்’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “எனது பிரதிநிதிகள் இன்று காசா தொடர்பாக இஸ்ரேலியர்களுடன் பயனுள்ள சந்திப்பை நடத்தினர். காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது, அதே நேரத்தில் […]

Loading