புதுடெல்லி, ஆக. 7 – ரஷ்ய அதிபர் விளாதிமர் புதின் இந்த மாதம் இந்தியாவுக்கு வரவிருப்பதாக, ரஷ்யாவின் இன்டர்பாக்ஸ் செய்தி நிறுவனம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் கூறியதாகத் தெரிவித்துள்ளது. இந்தியா, ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வர்த்தகப் பதற்றங்களுக்கு மத்தியில் அதிபர் புடினின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அஜித் தோவலின் மாஸ்கோ […]
![]()


