செய்திகள்

பாம்பன் அருகே படகிலிருந்து கடலில் விழுந்த 2 மீனவர்கள் மாயம்

ராமேஸ்வரம், ஜன. 11: பாம்பன் அருகே பலத்த காற்று வீசியதால் படகிலிருந்து கடலில் விழுந்த தூத்துக்குடி மீனவர் உள்பட 2 பேர் மாயமானார்கள். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் இருந்து நம்புச்சாமி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு ஒன்றில் சரத்குமார் (வயது 28), டைசன் (32), ரீகன், டோனி, வெள்ளைச்சாமி ஆகிய 5 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு தனுஷ்கோடி […]

Loading

செய்திகள்

காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

காசியும், ராமேஸ்வரமும் பிரித்து பார்க்க முடியாத புண்ணிய நகரம் ராமேஸ்வரம், டிச.31- ”காசியும், ராமேஸ்வரமும் பிரித்து பார்க்க முடியாத புண்ணிய நகரங்களாக விளங்குகின்றன. இந்திய தேசம் குறித்து மகாகவி பாரதியார் கண்ட கனவு பிரதமர் மோடியின் காசி, தமிழ் சங்கமம் மூலம் நிறைவேறியுள்ளது” என ராமேஸ்வரத்தில் நடந்த காசி தமிழ் சங்கமம் 4.0 நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கடந்த 2-ந்தேதி வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் பிரதமர் மோடி […]

Loading

செய்திகள்

காதலிக்க மறுத்ததால் 12ம் வகுப்பு மாணவி வெட்டிக் கொலை

ராமநாதபுரம், நவ. 19 காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவியை இன்று இளைஞர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் ராமேஸ்வரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம், சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், கவிதா தம்பதியின் மகள் ஷாலினி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த குப்புசாமி, முத்துமாரி தம்பதியின் மகன் முனிராஜ் (20) என்பவர் அந்த பெண்ணை கடந்த ஒரு வருடமாக ஒருதலைபட்சமாக காதலித்ததாகவும், இதற்கு அந்த […]

Loading

செய்திகள்

இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்: தமிழகம், காரைக்கால் மீனவர்கள் 47 பேர் கைது

ராமேஸ்வரம், அக். 9– எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 30 பேர் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியையும், மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது ஆண்டாண்டு காலமாக தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. இந்தநிலையில் ராமேசுவரத்தில் இருந்து நேற்று 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்றிரவு தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே நடுக்கடலில் […]

Loading

செய்திகள்

ராமேஸ்வரத்தில் 10-வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்

ராமேஸ்வரம், ஆக. 20– ராமேஸ்வரத்தில் மீனவர்கள் 10–வது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து 55 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 61 பேர் எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட் டது.கைதான மீனவர்கள் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா […]

Loading

செய்திகள்

பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்த ரெயிலை அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பயணி

ராமேஸ்வரம், ஆக. 9– பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்த ரெயிலின் அபாய சங்கிலியை பயணி ஒருவர் இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட நில பகுதியையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன்- –மண்டபம் இடையே நடுக்கடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் புதிய ரெயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அண்மையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த புதிய ரெயில் பாலத்தில் தற்போது ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ராமேசுவரம் ரெயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் […]

Loading

செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம், ஜூலை 31– நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நாட்டு படகில் மீன்பிடிக்க சென்ற 9 பேரை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது […]

Loading

செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம், ஜூலை 13– நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் நெடுந்தீவுக்கு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை […]

Loading

தமிழக மீனவர்கள் கைது
செய்திகள்

தொடரும் அட்டூழியம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம், ஜூலை 1– ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து நேற்று காலை 500 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துகொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டியடித்தனர். இதனை தொடர்ந்து ஒரு படகையும் அதில் இருந்த 7 மீனவர்களையும் சிறைபிடித்தனர். சிறைபிடித்த மீனவர்களை நடுக்கல் […]

Loading