செய்திகள்

தவெகவுடன் கூட்டணி வைக்க டிடிவி தினகரன் விரும்பினார்

கோவை, ஜன. 27– தவெகவுடன் கூட்டணி வைக்க அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விரும்பியதாக தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்துக்கு வருகைதந்த செங்கோட்டையனிடம், தவெக மீதான அண்ணா தி.மு.க. விமர்சனம், அண்ணா தி.மு.க. கூட்டணியில் தினகரன் இணைந்தது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு பதிலளித்து செங்கோட்டையன் கூறியதாவது:– பா.ம.க. ராமதாஸ் தவெகவுடன் பேசியதாக செய்தி பார்த்தேன், நல்லது நடக்கட்டும். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் […]

Loading

செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் இணைவது குறித்து பரிசீலனை: ராமதாஸ் அறிவிப்பு

சென்னை, ஜன. 12– தி.மு.க. கூட்டணியில் இணைவது குறித்து பரிசீலனை செய்வதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் பா.ம.க.வில் இருந்து நீக்கம் செய்து ராமதாஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். பாமகவில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் தந்தை மகன் இடையே மோதல் வெடித்தது. அப்போது ஏற்பட்ட மோதல் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தற்போது உச்சத்தை சந்தித்திருக்கிறது. தொடர்ந்து இறுதி தரப்பும் ஆதரவாளர்களை நீக்குவதும், சேர்ப்பதுமாக […]

Loading

செய்திகள்

சட்டசபை வளாகத்தில் அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்

சென்னை, அக்.14– சட்டசபை வளாகத்தில் பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் சட்டசபையில் பா.ம.க. குழுத் தலைவர் ஜி.கே.மணி, பாமக கொறடாவாக அருள் ஆகியோரை நீக்கக் கோரி கடந்த மாதம் அன்புமணி ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைச் செயலர் சீனிவாசனை சந்தித்து கடிதம் கொடுத்தனர். ஆனால் இதுவரை பா.ம.க. குழுத் தலைவர் […]

Loading

செய்திகள்

பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணி மகன் நியமனம்: ராமதாஸ் அறிவிப்பு

திண்டிவனம், அக்.3- பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணி மகன் தமிழ்குமரனை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்தார். விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் கடந்த 28.12.2024 அன்று நடைபெற்ற பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக தனது பேரனான முகுந்தனை (டாக்டர் ராமதாசின் மூத்தமகள் காந்திமதியின் மகன்) நியமிப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் அன்புமணி, மைக்கை மேஜையில் வீசிவிட்டு வெளியேறினார். அதன்பிறகுதான் தந்தை, மகனான டாக்டர் ராமதாசுக்கும், […]

Loading

செய்திகள்

பாட்டாளி மக்கள் கட்சி பெயர், சின்னம்: ராமதாஸ் தரப்பில் ‘கேவியட்’ மனு தாக்கல்

சென்னை, செப். 10– பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை தொடர்பாக, கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவற்றில் ‘கேவியட்’ மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விழுப்புரத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில், பாமக நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ், தனது மூத்த மகள் காந்திமதியின் மகன் பி. முகுந்தனை இளைஞர் பிரிவு தலைவராக அறிவித்தார். இதற்கு […]

Loading

செய்திகள்

அன்புமணி மீது நடவடிக்கை: ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக நிர்வாக குழுக் கூட்டத்தில் ஆலோசனை

விழுப்புரம், செப். 3– ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக நிர்வாக குழுக் கூட்டத்தில் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது. அன்புமணி ராமதாஸ் மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்காததால் அவர் மீதான நடவடிக்கையை ராமதாஸ் நாளை (வியாழக்கிழமை) எடுப்பார் என்று கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் […]

Loading

செய்திகள்

அன்புமணியுடன் எதுவும் பேசவில்லை: ராமதாஸ்

விழுப்புரம் பட்டானூரில் திட்டமிட்டபடி நாளை சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும், வதந்திகளை நம்பாதீர்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் ராமதாசின் மனைவி சரஸ்வதியின் பிறந்தநாள் என்பதால் அன்புமணி ராமதாஸ், தனது தாயார் சரஸ்வதியுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். தாயாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராமதாசுடன் அன்புமணி பங்கேற்ற […]

Loading

செய்திகள்

நான் பதில் சொல்ல ஆரம்பித்தால் ராமதாஸ் பெயர் கெட்டுப்போய்விடும்: பொதுக்குழுவில் அன்புமணி பேச்சு

சென்னை, ஆக.10-– நான் பதில் சொல்ல ஆரம்பித்தால் டாக்டர் ராமதாஸ் பெயர் கெட்டுப்போய்விடும் என்று பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண அரங்கில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, சி.ஆர்.பாஸ்கரன், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், சிவகுமார் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:- […]

Loading

செய்திகள்

அன்புமணி ராமதாசின் தலைவர் பதவி ஓராண்டு நீட்டிப்பு பா.ம.க. பொதுக்குழுவில் அதிரடி முடிவு

சென்னை, ஆக. 9– சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் பதவிகாலத்தை ஓராண்டு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமகவில் அதன் நிறுவனர் ராமதாசுக்கும், அவரின் மகனும் மற்றும் கட்சியின் தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் கோர்ட் வரை சென்றுவிட்டது. ஆக.19ம் தேதி பாமக பொதுக்குழு நடைபெறும் என்று ஒரு பக்கம் ராமதாஸ் அறிவிக்க, மறுபுறம் தாமும் இன்று (9–ந் தேதி) பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டுவதாக அன்புமணி அறிவித்தார். இதற்கு எதிராக […]

Loading

செய்திகள்

ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

சென்னை, ஆக. 5– ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், என் வீட்டிலேயே, நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்பு கருவியை வைத்துள்ளனர். யார் வைத்தார்கள்?, எதற்காக வைத்தார்கள்? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் […]

Loading