செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் ஊழல் தான் சாதனை மோடி முன்னிலையில் எடப்பாடி சபதம்

மதுராந்தகம், ஜன.24– தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். அண்ணா தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட கூறினார். தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை ஊழல் தான் என்றும் அவர் கூறினார். அண்ணா தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று மாலை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, தமிழக பாஜக […]

Loading

செய்திகள்

‘2026ம் ஆண்டு அற்புதமாக அமையட்டும்’: ஜனாதிபதி முர்மு, மோடிவாழ்த்து

புதுடெல்லி, ஜன. 1– இன்று (ஜனவரி 1) 2026ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்திருக்கிறது. உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். திர​வுபதி முர்​மு, ‘‘இந்த புத்​தாண்டு புதிய சக்தி மற்​றும் நேர்​மறை​யான மாற்​றத்​தின் அடை​யாள​மாக இருக்​கட்​டும். சுயபரிசீலனை மற்​றும் புதிய தீர்​மானங்​கள் எடுக்​க​வும் இது நல்ல வாய்ப்​பு. இந்​நாளில், நாட்​டின் வளர்ச்​சி, சமூக நல்​லிணக்​கம் […]

Loading

செய்திகள்

2030 காமன்வெல்த் விளையாட்டுகளை அகமதாபாத்தில் நடத்த அறிவிப்பு வெளியீடு

அமதாபாத், நவ. 26: அகமதாபாத்தில் 2030ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டுகள் நடத்தும் உரிமை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியீட்டுள்ளது.காமன்வெல்த் அமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், 2030 நூற்றாண்டு காமன்வெல்த் விளையாட்டுகளை நடத்தும் நகராக அகமதாபாத் நகரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2010-இல் டெல்லி காமன்வெல்த் விளையாட்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மீண்டும் இந்த உலகளாவிய பன்முக விளையாட்டு விழா நடைபெற இருப்பது ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியுடன் பல தலைவர்களும் இந்த அறிவிப்பை வரவேற்று, இது […]

Loading

செய்திகள்

ஆசியான் மாநாட்டை புறக்கணித்த மோடி: காணொலி மூலம் பங்கேற்கிறார்

கோலம்பூர், அக். 23– மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியான் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காணொலி மூலம் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாக மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மலேசியாவில் வரும் 26–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை 3 நாட்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரேசில் அதிபர் லூலா டி சில்வா உள்ளிட்ட முக்கியத் […]

Loading

செய்திகள்

மும்பையில் பிரதமர் மோடி– பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு

மும்பை, அக். 9– 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற பின், முதல் முறையாக இந்தியாவுக்கு நேற்று கேர் ஸ்டார்மர் வந்தார். அவர், மகாராஷ்டிராவின் மும்பையில் இருந்து தன் அரசுமுறை பயணத்தை துவங்கியுள்ளார். அவருடன் பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் என 125 பேர் அடங்கிய குழுவினரும் வந்துள்ளனர். இந்நிலையில் இன்று மும்பையில் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரை […]

Loading

செய்திகள்

கரூர் த.வெ.க. கூட்டத்தில் பெரும் சோகம்: நெரிசலில் சிக்கி 39 பேர் பலி; பலர் படுகாயம்

கரூர், செப். 28 – கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் கலந்துகொண்ட தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பு விவரம்: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த தகவலின்படி, […]

Loading

செய்திகள்

‘‘இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் நான் மிக நெருக்கமாக உள்ளேன்’’: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி

செக்கர்ஸ், செப். 19– ‘‘இந்தியாவுடன் தனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது’’ என்றும், பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட நட்பு கொண்டிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் கிராமப்புற இல்லமான செக்கர்ஸில் அவருடன் இணைந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:– “நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக உள்ளேன், நான் இந்தியப் பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவை கொண்டுள்ளேன். சமீபத்தில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க […]

Loading

செய்திகள்

கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்

இம்பால், செப். 12– கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி நாளை மணிப்பூர் செல்ல இருக்கிறார். மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி அகிய 2 இனக்குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர். இதனை தொடர்ந்து, […]

Loading

செய்திகள்

நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்’: இந்தியா – அமெரிக்கா வர்த்தகம் குறித்து பேச விரும்பும் டிரம்புக்கு மோடி பதில்

புதுடெல்லி, செப். 10– இந்தியா–அமெரிக்கா இடையேயான வர்த்தகம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், பிரதமர் மோடியும் வெளியிட்டுள்ள கருத்து வரவேற்பைப் பெற்றிருக்கும். அதே நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘‘வர்த்தகத் தடைகளை தகர்க்க உங்களுடன் பேச விரும்புகிறேன்’’ என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கு பிரதமர் மோடியும் ‘‘ஆவலுடன் காத்திருக்கிறேன்’’ என இசைவு தெரிவித்துள்ளார். உலகளவில் அமெரிக்காவின் வர்த்தக கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில், பல்வேறு நாடுகள் மீது அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த சில மாதங்களாக […]

Loading

செய்திகள்

52 கிலோ மீட்டர் நீலத்தில் ரூ. 8 ஆயிரம் கோடியில் ஐஸ்வாலை இணைக்கும் புதிய ரயில் பாதை

மோடி விரைவில் துவக்குகிறார் ஐஸ்வல், செப். 1– மிசோரம் மாநிலத் தலைநகரம் – ஐஸ்வாலை இணைக்கும் வகையில் பைரபி யிலிருந்து சாய்ரங் வரையிலான 52 கிலோமீட்டர் சவாலான அடர்ந்த வனப்பகுதியில் 51.38 கிலோமீட்டரில் சுமார் ரூ. 8, 071 கோடி மதிப்பிலான புதிய ரயில் பாதை அமைக்கப் பட்டுள்ளது. இதை விரைவில் மோடி விரைவில் திறந்து வைக்கிறார். வடகிழக்கு மாநிலங்களில் மலைகளின் இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது மிசோரம். இம்மாநிலத்திற்கு 2014ஆம் ஆண்டு வரை அசாம் எல்லையில் இருந்து […]

Loading