செய்திகள்

கனிமொழிக்கு ஸ்டாலின் அமித்ஷா, விஜய் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, ஜன.5– தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்தி்ய உள்துறை அமைச்சர் அமித்ஷா, த.வெ.க. தலைவர் விஜய் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யு.மான கனிமொழி இன்று தனது 58 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு கனிமொழிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை […]

Loading

செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்

சென்னை, டிச.26- புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டிசம்பர் 31-ந் தேதி(புதன்கிழமை) நள்ளிரவு ஓட்டல்கள், கடற்கரை, ரிசார்ட்டுகளில் உற்சாகம் களைகட்டும். புத்தாண்டுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கடற்கரை ரிசார்ட்டுகள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் […]

Loading

செய்திகள்

மெரினா கடற்கரையில் மீண்டும் களைகட்டிய ‘கலைவிழா’

சென்னை, டிச.8-– சென்னை மாநகராட்சி சார்பில் ‘மெரினாவில் கலைவிழா’ என்ற பெயரில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் வாரந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்படும் இந்த நிகழ்வு கடந்த வாரம் ‘டிட்வா’ புயல், கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. சென்னை இயல்புநிலைக்கு திரும்பியநிலையில், நேற்று மாலை மெரினாவில் உள்ள நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் வழக்கம்போல ‘கலைவிழா’ களைகட்டியது. தமிழகத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று […]

Loading