செய்திகள்

போரூர் – வடபழனி இடையே இன்று மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை, ஜன. 11: போரூர்- – வடபழனி இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. 2ஆம் கட்ட திட்டத்தில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி முதல் போரூர் […]

Loading

செய்திகள்

சென்ட்ரல் – விமான நிலையம் மெட்ரோ ரெயில் சேவை ரத்து

சென்னை, டிச. 30: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் சேவையானது நீலம் மற்றும் பச்சை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் மற்றும் பரங்கிமலைக்கு பச்சை வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் விம்கோ நகரில் இருந்து சைதாப்பேட்டை வழியாக விமான நிலையத்துக்கு நீல வழித்தடத்தில் […]

Loading

செய்திகள்

பனகல் பூங்கா முதல் போட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது ‘‘மயில்’’ இயந்திரம்

சென்னை, டிச. 13– பனகல் பூங்கா நிலையம் முதல் போட் கிளப் நிலையம் வரை சுரங்கம் அமைக்கும் பணியை “மயில்” சுரங்கம் தோண்டும் இயந்திரம் தொடங்கியது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்–2 வழித்தடம் 4 கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை அமைக்கப்படவுள்ளது. இதில் மெரினா கடற்கரையில் உள்ள […]

Loading

செய்திகள்

ரூ.8,779 கோடியில் பூந்தமல்லி-–சுங்குவார்சத்திரம் வரை 27.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் உயர் மேம்பாலம்

சென்னை, ஜூலை.14- பூந்தமல்லி-–சுங்குவார்சத்திரம் வரை 27.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.8 ஆயிரத்து 779 கோடி மதிப்பில் மெட்ரோ ரெயில் உயர்மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள பரந்தூரில் 4 ஆயிரத்து 971 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.20 ஆயிரம் கோடி செலவில், சென்னையின் 2-வது புதிய சர்வதேச விமானநிலையம் அமைய உள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, […]

Loading

செய்திகள்

மெட்ரோ ரெயில் பணியாளர்களுக்கு நவீன பயிற்சி மையம்:

சென்னை, ஜூலை 4– மெட்ரோ ரெயில் பணியாளர்களுக்கு நவீன பயிற்சி மையத்தை மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் துவக்கி வைத்தார். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பணிபுரியும் பணியாளர்களின் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கத்தில் கோயம்பேடு பணிமனையில் இயக்கத்துறையின் பிரத்யேக பயிற்சி மையத்தை தொடங்கியது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், 2007-ல் நிறுவப்பட்டு, 2015-ஆம் ஆண்டு முதல் பயணிகள் சேவையைத் தொடங்கியது. கடந்த பத்தாண்டுகளாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. […]

Loading