செய்திகள்

எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி 108–வது பிறந்தநாள்: ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை, செப் 16– விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 108–வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘இந்திய நாட்டின் விடுதலைக்குப் போராடிய வீரரும், முன்னாள் அமைச்சரும், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக முன்னின்ற சமூகநீதித் தலைவருமான ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளைப் போற்றி வணக்கம் செலுத்தினேன்’’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading