செய்திகள்

இசையால் எட்டுத்திக்கும் ஆளும் ஏ.ஆர்.ரகுமான்: மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, ஜன. 6: இசையால் எட்டுத்திக்கும் ஆளும் ஏ.ஆர்.ரகுமானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும், ஆஸ்கர் நாயகனுமான ஏ.ஆர். ரகுமான் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர், திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– இசையால் எல்லைகளைக் கடந்து, எட்டுத்திக்கும் ஆளும் அன்பு இளவல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு இனிய பிறந்தநாள் […]

Loading

செய்திகள்

தி.மு.க.வில் இணைந்த விஜய்யின் முன்னாள் செயலாளர் பி.டி. செல்வகுமார்

சென்னை, டிச.11: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் முன்னாள் செயலாளர் பி.டி.செல்வகுமார், தி.மு.க.வில் இன்று இணைந்தார். சென்னையில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவர் நடத்தி வந்த கலப்பை மக்கள் இயக்கத்தை தி.மு.க.வில் இணைத்தார். அவருடன் அதன் நிர்வாகிகள் அனைவரும் தி.மு.க.வில் இணைந்தனர். விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருடன் இணைந்து பணியாற்றிய செல்வகுமார், பின்னர் விஜய்யின் மேலாளர் ஆனார். பந்தா பரமசிவம், ஒன்பதுல குரு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள செல்வகுமார், புலி, ஜெயில் […]

Loading

செய்திகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்து

சென்னை, செப்.5– இன்று (5–ந் தேதி) ஆசிரியர் தினம். இதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– ‘பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பிப் பிள்ளைகளை ஒப்படைக்கிறார்கள். பிள்ளைகள் பெற்றோரை விட ஆசிரியர்கள் சொல்வதையே அதிகம் நம்புகிறார்கள். அந்த மாணவர்களுக்குத் தமிழை, அறத்தை, அரசியலை, அறிவியலை என அனைத்தையும் கற்பித்து அவர்களின் உயர்வுக்காகப் பாடுபடும் நல்லாசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

செய்திகள்

தமிழ்நாடு டெல்லிக்கு அடிபணியாது: மு.க. ஸ்டாலின் உறுதி

சென்னை, ஜூலை.12- மக்கள்தொகை கட்டுப்பாட்டில் முன்னணியில் இருக்கும் தமிழகத்தை தண்டிக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதில் அநியாயம் செய்யப்படுகிறது. அதனால் தமிழ்நாடு டெல்லிக்கு அடிபணியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மக்கள்தொகை தினமான நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- உலக மக்கள்தொகை நாளில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல். தமிழ்நாடு மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் முன்னணி வகிக்கிறது, பெண்களின் மாண்பைக் காத்து அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குகிறது. அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வியை உறுதிசெய்கிறது. நீடித்து […]

Loading

குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு நிறைவு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
செய்திகள்

குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு நிறைவு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஜூலை 11– தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவையொட்டி பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர் வழியில் பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு இன்று! தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர்! சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் எனத் திராவிட இயக்கத்துக்குத் […]

Loading