செய்திகள்

காலவரையற்ற போராட்டம் வாபஸ்: ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு

சென்னை, ஜன. 3– புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்ட முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை தெரிவித்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் காலவரையற்ற போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் முதல்வருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர். தொடர்ந்து […]

Loading

செய்திகள்

தி.மு.க.வினருக்கு எஸ்ஐஆர் பயிற்சி : இளங்கோ எம்.பி. தகவல்

மாநிலங்களவை உறுப்பினர் என். ஆர். இளங்கோ தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வு குறித்து திமுக சட்டத்துறை பயிற்சி முகாம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான திமுக சட்டத்துறையினருக்கும், திமுக இளைஞர் அணியினருக்கும் மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்ப அணியினருக்கும் எஸ்ஐஆர்-ஐ எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வை மக்கள் பக்கம் நின்று எதிர்கொள்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

Loading