செய்திகள்

மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: மா.சுப்பிரமணியன், சேகர்பாபு வழங்கினர்

சென்னை, ஜன. 21: சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள 5 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 1,520 பேருக்கு மடிக்கணினிகளை -மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் வழங்கினர். சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகிய 5 மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம், […]

Loading

செய்திகள்

கடலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டச் செயல்பாடுகள்: கலெக்டர் ஆய்வு

கடலூர், ஜன. 6: கடலூர் மாவட்டம் திருவந்திபுரம், கடலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: முதலமைச்சர் தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்விக்கு முக்கியத்துவம் அளித்து இன்றைய குழந்தைகள்தான் நாளைய எதிர்கால சமுதாயம் என்பதை அறிந்து, அவர்களுக்கு கல்வி அளிக்கவும், பசியின்றி கல்வி பயிலவும், தொடக்கப்பள்ளிகளில் காலை […]

Loading

செய்திகள்

அரசு கலை கல்லூரி கட்டுவதற்கான புதிய இடம்: அமைச்சர் கோ.வி. செழியன் ஆய்வு

வேலூர், ஜன. 3: கீ.வ.குப்பம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில் கல்லூரி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது என அமைச்சர் கோ.வி.செழியன் கூறினார். முதலமைச்சர் அறிவித்த கீ.வ.குப்பம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில் கல்லூரி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது. கல்லூரி கட்டுவதற்கான புதிய இடத்தினை வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பத்தில் உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் பார்வையிட்டு […]

Loading

செய்திகள்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய ஸ்டாலின் : எடப்பாடி குற்றச்சாட்டு

திருத்தணி, டிச. 30: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி விட்டார் ஸ்டாலின் என்று எடப்பாடி குற்றஞ்சாட்டினார். எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று 178வது தொகுதியான திருத்தணியில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து திருத்தணி, சோளிங்கர் சாலை, வீரகநல்லூரில் உள்ள திறந்தவெளித் திடலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2500 ரூபாய் ஆதார விலை, ஒரு டன் கரும்புக்கு 4 ஆயிரம் […]

Loading

செய்திகள்

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தே தீரும்: திருப்பூர் தி.மு.க. மகளிரணி மாநாட்டில் ஸ்டாலின் உறுதி

திருப்பூர், டிச. 30: வரும் தேர்தலில் வெற்றி பெற்று பெண்களுக்கான திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவோம் என்று பல்லடத்தில் நேற்று நடந்த தி.மு.க. மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். திராவிட மாடல் அரசின் திட்டங்கள், சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார். சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதையொட்டி சமீபத்தில் இளைஞரணி மண்டல கூட்டத்தை திருவண்ணாமலையில் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பில் தி.மு.க. மகளிரணி மேற்கு மண்டல […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் : ஸ்டாலின் உத்தரவு

சென்னை, டிச. 29: கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிதிவிமங்கலம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிதிவிமங்கலம் கிராமத்தில் வசிக்கும் அய்யாக்கண்ணு என்பவரின் மகன் ராஜகோபால் (வயது 57) என்பவர் நேற்று (28–ந் தேதி) காலை தனக்குச் சொந்தமான கிணற்றில் உள்ள விவசாய மின்மோட்டாரினை விவசாயத்திற்காக இயக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் […]

Loading

செய்திகள்

பச்சைப்பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி தாக்கு

திருப்போரூர், டிச. 29: பச்சைப்பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொண்டு 5 கட்டங்களில் 175 தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து எழுச்சிப்பயணம் மேற்கொண்டார். 6வது கட்டமாக நேற்று திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட கேளம்பாக்கம், ராஜீவ்காந்தி ஐடி எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள இஜ்திமா திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் […]

Loading

செய்திகள்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

ராமநாதபுரம், டிச. 29: நடுக்கடலில் மீன்பிடித்தபோது தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு துறைமுக பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதன்படி மண்டபத்தை சேர்ந்த விசைப்படகு ஒன்றில் ஆமோஸ்டின் (வயது 25), ஜோன்தாஸ் (38), பரலோக செபஸ்தியான் (26) ஆகிய 3 மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடல் […]

Loading

செய்திகள்

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் டயர் வெடித்து 2 கார்கள் மீது மோதி விபத்து: 9 பேர் பலி

சென்னை, டிச. 25– கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை, எழுத்தூர் கிராமம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திருச்சியில் இருந்து நேற்று மாலை சென்னை நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் கடலூர் மாவட்டம் மதுரையில் இருந்து சென்னை நோக்கி நேற்று மதியம் அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த […]

Loading

செய்திகள் முழு தகவல்

அமித்ஷாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

திருவண்ணாமலை, டிச. 15: ‘அன்போடு வந்தால் அரவணைப்போம், ஆணவத்துக்கு அடிபணியமாட்டோம்’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது. இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் திருச்சி […]

Loading