செய்திகள் முழு தகவல்

சென்னை கோவளத்தில் “மாமல்லன்” நீர்த்தேக்கம் அமைக்கும் பணி : ஸ்டாலின் அடிக்கல்

சென்னை, ஜன. 19: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் பழைய மாமல்லபுரம் சாலைக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையில் கோவளம் உபவடிநிலப் பகுதியில் 5,161 ஏக்கர் பரப்பளவில் 342 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் நீர்த்தேக்கத்திற்கு “மாமல்லன்” என்று பெயர் சூட்டி, நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கு 34 கி.மீ […]

Loading

செய்திகள்

சென்சார் போர்டு – ‘மத்திய அரசின் புதிய ஆயுதம்’: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, ஜன. 10: நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் மத்திய அரசின் திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நடித்துள்ள அவரது கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக நேற்று வெளியாகும் என்று பட தயாரிப்பு நிறுவனம் முதலில் அறிவித்திருந்தது. இந்த திரைப்படத்தை வரவேற்க அவரது ரசிகர்களும், த.வெ.க.வினரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் மத்திய அரசின் திரைப்பட தணிக்கை வாரியம் (சென்சார் போர்டு) இந்த படத்துக்கு சான்றிதழை வழங்காததால் […]

Loading

செய்திகள்

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஜன. 3: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்ட பயன்கள் கிடைக்கும் வகையில், ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்’ என்னும் புதிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த இன்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் படி அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்து விட்டால் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவிகிதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பது உட்பட […]

Loading

செய்திகள்

129 தீயணைப்புத்துறை அலுவலர்கள், 621 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி ஆணை

சென்னை, ஜன. 3: சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 621 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 129 தீயணைப்புத்துறை நிலைய அலுவலர்கள், என மொத்தம் 750 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:– தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம், அமைதிப் பூங்கா என்று இந்திய அளவில் எல்லோரும் சொல்கிறார்கள்; […]

Loading

செய்திகள்

ரூ.22 கோடியில் காவல்துறையில் கட்டிடங்கள் 9 புதிய காவல் நிலையங்கள்: ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, டிச. 22: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 22 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 16 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவிலும் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் 68 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், 9 புதிய காவல் நிலையங்களையும், புதிதாக உருவாக்கப்பட்ட உத்திரமேரூர், வேளாங்கண்ணி […]

Loading

செய்திகள்

தேர்தல் வருவதால் ‘லேப்டாப்’ நாடகம் நடத்துகிறார் ஸ்டாலின்: எடப்பாடி கடும் கண்டனம்

சென்னை, டிச.18: நான்கரை ஆண்டுகளாக மாணவர்களை வஞ்சித்துவிட்டு இப்போது தேர்தல் வருவதால் மாணவர்களுக்கு ‘லேப்டாப்’ வழங்க நாடகத்தை அரங்கேற்றுகிறார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார். ஜெயலலிதா, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அனைத்து வகைகளிலும் அறிவுப்பூர்வமாக கல்வி பயின்று, தங்களது வாழ்க்கையில் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தமது ஆட்சிக் காலத்தில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி சாதனை படைத்தார். ஜெயலலிதா வழியில் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும், […]

Loading

செய்திகள்

மாற்றுத்திறனாளி பாதுகாவலருக்கு சான்றிதழ் : விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் வழங்கினார்

விழுப்புரம், டிச. 12: விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது: முதலமைச்சர் மற்ற துறைகளை காட்டிலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மின்கலனால் இயங்கும் […]

Loading

செய்திகள்

ஜெயலலிதா இசை பல்கலைக்கழகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் 4 புதிய அறிவிப்பு வெளியிட்டார்

சென்னை, நவ.28: ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துக்கு மாணவ மாணவிகள் பயன் பெறும் விதத்தில் ஆங்கில உரையாடல் பயிற்சி – டிஜிட்டல் திறன் சார்ந்த படிப்புகள் அறிமுகம் உள்பட 4 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். ஏ.ஐ. தொழில்நுட்பம் கண்டு மாணவர்கள் கவலைப்படக்கூடாது; எவ்வளவு தான் டெக்னாலஜி வளர்ந்தாலும் அதனால் மனிதர்களின் சிந்தனையை வெல்ல முடியாது. தொழில்நுட்பத்தை நம்முடைய பலத்திற்கு நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். ஜெயலலிதா இசை […]

Loading

செய்திகள்

ஜெயலலிதா இசை – கவின்கலைப் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக மாலதி லக்ஷ்மண் நியமனம்

சென்னை, நவ. 24: தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள மாலதி லக்ஷ்மண் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். நியமனம் குறித்து பேசிய அவர், “அரசு அளித்துள்ள இந்த மிகப்பெரிய அங்கீகாரம் மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. இசைத் துறைக்கு வலுவூட்ட என்னால் ஆன அனைத்து […]

Loading

செய்திகள்

‘சென்னை சில்க்ஸ்’ ஆடை உற்பத்தி ஆலை- ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்.

சென்னை, நவ.13– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், திருவாரூர் மாவட்டத்தில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், எஸ்.சி.எம். கார்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (தி சென்னை சில்க்ஸ் குழுமம்) ஆடை உற்பத்தி அலகு அமைக்கும் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் […]

Loading