செய்திகள்

சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் 9 புதிய அறிவிப்புகள்

சென்னை, ஆக. 15– இன்று (15–ந் தேதி) 79–வது சுதந்திர தினத்தைத்யொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். போலீசாரின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் இனி ரூ.22,000 ஆகவும், தியாகிகளின் குடும்பங்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் இனி ரூ.12,000 ஆகவும், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி. வாரிசுகளுக்கு ஓய்வூதியம் இனி ரூ.11,000 ஆகவும் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் […]

Loading

செய்திகள்

சென்னை கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார்

சென்னை, ஆக. 15– சுதந்திர தினத்தைத்யொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். 79வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின கொடி ஏற்றுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீசாரின் மோட்டார் சைக்கிள் புடைசூழ கோட்டைகொத்தளத்திற்கு வந்தார். அவரை தலைமை செயலாளர் நா. முருகானந்தம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தென்னிந்தியப் பகுதிகளின் தலைமைப் படைத்தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் வி. ஸ்ரீரீஹரி, தமிழ்நாடு மற்றும் […]

Loading

செய்திகள்

தூய்மைப் பணியாளர்களுக்கு 6 புதிய திட்டங்கள் அறிவிப்பு

சென்னை, ஆக. 14– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். முன்னதாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்து, போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்துக்கு அண்ணாதி.மு.க., மார்க்சிஸ்ட், தே.மு.தி.க., த.வெ.க. […]

Loading

செய்திகள்

அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்

சென்னை, ஆக. 12– அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தமிழக அரசியலில் பாஜ – அதிமுக – பாஜ என பல முறை கட்சி மாறியவர் மைத்ரேயன். இவர், 1990களில் பாஜவில் இணைந்தார். அந்த கட்சியில் மாநில அளவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த மைத்ரேயன், 2000ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அண்ணா தி.மு.க.வில் இணைந்தார். 2002ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அதிமுக சார்பில் ராஜ்யசபா […]

Loading

செய்திகள்

சென்னை கம்பன் கழக பொன்விழா நிறைவு

சென்னை, ஆக 7– சென்னை கம்பன் கழக பொன்விழா ஆண்டு நிறைவு விழாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார். சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நாளை முதல் 3 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசுகிறார். சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையம் நிறுவியுள்ள ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர் விருதை’ கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்குகிறார். பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், கம்பன் அடிசூடி பழ. பழநியப்பன், பேராசிரியர் சாரதா நம்பி […]

Loading

செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19%

சென்னை, ஆக.6– 14 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெறாத மாபெரும் வளர்ச்சி என்றும் அவர் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 2 ஆயிரத்து 538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– […]

Loading

செய்திகள்

ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரேமலதா விஜயகாந்த், ஓ.பி.எஸ்.

சென்னை, ஜூலை 31– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்தித்து நலம் விசாரித்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய நிலையில், 3 நாட்கள் டாக்டர்களின் அறிவுறுத்தல்படி ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலினை பிரேமலதா விஜயகாந்த்தை […]

Loading

செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ சிகிச்சை

சென்னை, ஜூலை 24– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் இன்று தெரிவித்தார். மேலும், ஆஞ்சியோ பரிசோதனையில் முதல்வருக்கு அடைப்பு எதுவும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்ததாக துரைமுருகன் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த திங்கட்கிழமை காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ள சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முதலமைச்சர் 3 […]

Loading

செய்திகள்

கூட்டணி கட்சிகளை மு.க.ஸ்டாலின் விழுங்கிக்கொண்டு இருக்கிறார்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

கும்பகோணம், ஜூலை.22- காங்கிரஸ் தேய்ந்து விட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்ணுக்கு தெரியவில்லை. கூட்டணி கட்சிகளை மு.க.ஸ்டாலின் விழுங்கிக் கொண்டு இருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி கூறினார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தில் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தொகுதியில் தனது பிரச்சாரத்தை அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார். பிரசார பஸ்சில் நின்றபடி அவர் பேசியதாவது:- தி.மு.க. கூட்டணி பலமான கூட்டணி. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையில் […]

Loading

செய்திகள்

தேனாம்பேட்டை அப்போலோவில் பரிசோதனை முடிந்து மீண்டும் கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ திரும்பினார்

சென்னை, ஜூலை 22– அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தினமும் காலையில், அடையாறு போட் கிளப் மைதானத்தில் நடைபயிற்சி செய்வது வழக்கம். நேற்று நடைபயிற்சியில் ஈடுபட்டபோது, அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள […]

Loading