சென்னை வானகரத்தில் நாளை சென்னை, டிச. 9– அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் ஏற்பாடு செய்து வருகிறார். வானகரம் அடையாளம்பட்டில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை (10ந் தேதி) புதன்கிழமை காலை 10 மணிக்கு அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். […]
![]()


