செய்திகள்

காசாவில் தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல்: அதிபர் டிரம்ப் தகவல்

வாஷிங்டன், அக்.5– காசாவில் தாக்குதலை தற்காலிகமாக இஸ்ரேல் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். காசா அமைதி திட்டத்தை ஹமாஸ் நடைமுறைப்படுத்திய உடனே காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார். மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் – காசா இடையிலான போரை நிறுத்துமாறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இருப்பினும், இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி […]

Loading

செய்திகள்

இமயமலைப் பயணத்தில் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை, அக்.5– நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ளார். சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு அவரிடம் இந்த பழக்கம் உருவானது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயிலர் – 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து […]

Loading

செய்திகள்

நாமக்கல்லில் எடப்பாடி பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பு

சென்னை, அக்.4– வருகிற சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி கடந்த 19-ந் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ந் தேதி நாமக்கல் மற்றும் பரமத்திவேலூரிலும், 21-ந் தேதி திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையத்திலும் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் […]

Loading

செய்திகள்

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் தீர்வை நோக்கி பயணிப்போம்: ஸ்டாலின்

சென்னை, அக். 4– கரூர் சம்பவத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் நீண்ட கால தீர்வை நோக்கி பயணிப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:– கரூர் துயரம் குறித்து உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது. கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து […]

Loading

செய்திகள்

பிறப்பால் குடியுரிமையை ரத்து செய்ய முடியாது: அமெரிக்க நீதிமன்றம்

பாஸ்டன், அக். 4– அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு, பிறப்பால் குடியுரிமையை வழங்குவதை, அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்று பாஸ்டனில் உள்ள பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது. நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம், நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கோ அல்லது தற்காலிகமாக தங்கியிருப்பவர்களுக்கோ பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமையை ரத்து செய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ளது. இது அமெரிக்க அதிபரின் பிறப்பால் குடியுரிமையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுக்கு […]

Loading

செய்திகள்

கனிமொழி எம்.பி. வீடு, இஸ்கான் கோவில், சென்னை விமான நிலையம் உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, அக். 4– சென்னையில் கனிமொழி எம்.பி. வீடு, இஸ்கான் கோவில், விமான நிலையம் உள்ளிட்ட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வீடு, கவர்னர் மாளிகை, விமான நிலையம், பள்ளி, கல்லூரிகள், அரசியல் பிரமுகர்கள், சினிமான நட்சத்திரங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து […]

Loading

செய்திகள்

தங்கம் ஒரு சவரன் ரூ.87,600க்கு விற்பனை; வெள்ளி ஒரு கிராம் – ரூ.165

சென்னை, அக்.4– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.87,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ஒரு கிராம் 165 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் மிக அதிக அளவில் முதலீடு செய்து வருவதால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று முன்தினம் ஆபரண தங்கம் கிராம் 10,950 ரூபாய்க்கும், சவரன் […]

Loading

செய்திகள்

கடல் மாநாடு: தூத்துக்குடி கடலில் படகில் சென்று சீமான் ஆய்வு

தூத்துக்குடி, அக். 4– நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடல் மாநாடு நடத்துவது குறித்து, தூத்துக்குடி மாவட்டம் அமலி நகர் மீனவ கிராமத்தில் இருந்து மீன்பிடி படகு மூலம் மீனவர்களுடன் கடலுக்குள் சென்று ஆய்வு செய்தார். ஐம்பூதங்கள் இல்லாமல் பூமியில் எந்த உயிரினங்களும் இருக்காது என்று கூறிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி திருத்தணி அருகே ‘மரங்களின் மாநாடு’, அதனை தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி தருமபுரியில் ‘மலைகளின் மாநாடு’ஆகியவற்றை […]

Loading

செய்திகள்

ஐகோர்ட் உத்தரவுபடி கரூரில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை தொடங்கியது

கரூர், அக். 4– கரூர் சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வுக்குழுவினர் இன்று கரூரில் விசாரணையை துவக்கினார்கள். அவர்களிடம் இதுசம்பந்தமாக ஆவணங்களை கரூர் போலீசார் ஒப்படைத்தனர். கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தது. இதைத் தொடரந்து சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியை […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவு

இஸ்லாமாபாத்,அக்.4– பாகிஸ்தான் கராச்சியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:– பாகிஸ்தான் கராச்சியில் இன்று அதிகாலை 1.59 மணியளவில் (இந்திய நேரப்படி) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது நிலப்பரப்பில் இருந்து பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாகப் பதிவானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பல இடங்களில் நன்கு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

Loading