செய்திகள்

சென்னையில் மீண்டும் போராட்டம்: தூய்மை பணியாளர்கள் கைது

சென்னை, அக். 10– சென்னையில் மீண்டும் போராட்டம் நடத்த முயன்ற மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த துய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி நள்ளிரவில் […]

Loading

செய்திகள்

ரவுடி நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம்: ஐகோர்ட்டில் மனைவி மனு

சென்னை, அக். 10– ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரனின் மனைவி, தனது கணவரின் உயிரிழப்பு குறித்து சந்தேகம் இருப்பதாக ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளார். இன்று பிற்பகல் அந்த மனு விசாரணைக்கு வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரத்தில் 29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி நாகேந்திரன் கல்லீரல் பிரச்சினையால் சிறையில் இருந்து ஸ்டான்லி அரசு […]

Loading

செய்திகள்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு; திட்டமிட்டபடி நாளை மறுநாள் நடைபெறும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை, அக். 10– நாளை மறுநாள் திட்டமிட்டபடி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெறும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 12ம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டது.புதிய பாடத்திட்டங்கள் அடிப்படையில் இந்த பாடம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதாலும். நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தங்களால் தேர்வுக்கு […]

Loading

செய்திகள்

தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவண்ணாமலை, அக். 10– தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையின் முழு நீர் மட்டம் 119.00 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 7321 மி.கன அடி ஆகும். அணையின் நீர்மட்டம் 114.15 அடியாக உள்ளது. அணையின் கொள்ளளவு 6263 மி.கன அடி ஆகும். திருவண்ணாமலை அணையில் அணையின் மாவட்டம் சாத்தனூர் ஒழுங்குமுறை விதிகளின்படி தற்போது வினாடிக்கு 2000 கனஅடி நீர் வெளியற்றப்பட்டு வருகிறது. சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து […]

Loading

செய்திகள்

கிட்னி முறைகேடு வழக்கு; தமிழக அரசு கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுப்பு

புதுடில்லி, அக். 10– கிட்னி முறைகேடு தொடர்பான வழக்கில், தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து, சட்டவிரோதமாக சிறுநீரகத்தை தானம் பெற்றனர். திருச்சி, பெரம்பலுாரில் இரு தனியார் மருத்துவமனைகள் இதில் ஈடுபட்டன. ஆளுங்கட்சி பிரமுகருக்கு சொந்தமான மருத்துவமனை என்பதால், தமிழக அரசு முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை. வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற […]

Loading

செய்திகள்

நெல்லையில் 8 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்: கல்லூரி மூடல்

நெல்லை, அக். 10– நெல்லையில் தனியார் கல்லூரியில் 8 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை கல்லூரி மூடப்பட்டது. நெல்லை மாவட்டம் திடியூரில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி மாணவர்களில் சிலருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாணவர்களுக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் 8 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சலுக்கான […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முதல் குற்றவாளி ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு

சென்னை, அக். 9– பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி அவரது வீட்டருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக முதல் குற்றவாளியான வடசென்னையின் பிரபல ரவுடி […]

Loading

செய்திகள்

தங்கம் ஒரு சவரன் ரூ.91,200க்கு விற்பனை

சென்னை, அக். 9– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவின் மீது தொடுத்துள்ள வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்துவிட்டு, தங்கத்தின் மீது ஏராளமானோர் முதலீடு செய்து வருகின்றனர். இது தங்கத்துக்கான தேவையை அதிகரிக்க செய்துள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை […]

Loading

செய்திகள்

விஜய் வீட்டுக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, அக். 9– சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகரில் தவெக தலைவர் விஜய் வீடு அமைந்துள்ளது. அவருக்கு மத்திய அரசு, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் விஜய் வீட்டிற்குள், மன நலம் பாதித்த நபர் ஒருவர் நுழைந்தார். இதனால், ஒய் பிரிவு பாதுகாப்பில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக […]

Loading

செய்திகள்

மும்பையில் பிரதமர் மோடி– பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு

மும்பை, அக். 9– 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற பின், முதல் முறையாக இந்தியாவுக்கு நேற்று கேர் ஸ்டார்மர் வந்தார். அவர், மகாராஷ்டிராவின் மும்பையில் இருந்து தன் அரசுமுறை பயணத்தை துவங்கியுள்ளார். அவருடன் பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் என 125 பேர் அடங்கிய குழுவினரும் வந்துள்ளனர். இந்நிலையில் இன்று மும்பையில் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மரை […]

Loading