செய்திகள்

கரூர் சம்பவம்: முதலமைச்சர் – எடப்பாடி காரசார விவாதம்

சென்னை, அக். 15– தமிழக சட்டப்பேரவையில் இன்று கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. கடும் அமளியால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டபேரவைக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணா தி.மு.க.வினர் பின்னர் கோஷம் எழுப்பியபடி வெளிநடப்பு செய்தனர். கரூர் தவெக கூட்ட நெரிசல் பலி குறித்து தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்து பேசுகையில் […]

Loading

செய்திகள்

தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் வாகனங்கள் வாங்க நடவடிக்கை

சென்னை, அக். 15– பேரிடர் மீட்பு பணிகளுக்காக தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் வாகனங்களை வாங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில், பேரிடர் மீட்பு பணிகளுக்கு தேவைப்படும் கனரக வாகனங்களை உள்ளூர் கொள்முதல் அல்லது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அரசு முன்வருமா எனவும் பஞ்சாபில் புயல் வந்த போது தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அவற்றை தமிழகத்தில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க […]

Loading

செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

* மக்களின் உயிரே முக்கியம் * மக்களின் உயிரே விலை மதிப்பற்றது சென்னை, அக்.15– ‘மக்களின் உயிரே முக்கியம், மக்களின் உயிரே விலை மதிப்பற்றது. 41 பேரை பலி வாங்கிய கரூர் போன்ற துயர சம்பவம் இனி நடக்கக்கூடாது என உறுதி எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில் அரசு செயல்படும்’ எனவும் அவர் உறுதியளித்தார். கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற துயர சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு […]

Loading

செய்திகள்

அமெரிக்க ரகசிய ஆவணங்கள் பதுக்கல்: இந்திய வம்சாவளி ஆலோசகர் கைது

வாஷிங்டன், அக். 15– அமெரிக்க விமானப் படை தொடர்பான ரகசிய ஆவணங்களை பதுக்கியதாகவும், சீன அரசு அதிகாரிகளுடன் ரகசிய தொடர்புகள் வைத்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய வெளியுறவுக் கொள்கை ஆலோசகருமான ஆஷ்லே டெல்லிஸ் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தின வியன்னா நகரில் வசித்து வருபவர் ஆஷ்லே டெல்லிஸ் (வயது 64). இந்தியா வம்சாவளியை சேர்ந்த இவர், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை சட்டவிரோத வகையில் […]

Loading

செய்திகள்

சென்னையில் விடிய விடிய மழை: தீபாவளி முதல்  வடகிழக்கு பருவமழை

சென்னை, அக்.14– தமிழகத்தில் இன்னும் ஓரிரு தினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வரும் 19ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் – பூமத்திய ரேகையை ஓட்டிய இந்திய பெருங்கடல் […]

Loading

செய்திகள்

தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பால கட்டுமானப் பணிகள்: அமைச்சர் வேலு ஆய்வு

சென்னை, அக்.15– சென்னை, அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசு திட்டமிட்டு, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, மேம்பாலம் கட்டும் பணியைத் துவக்கி, தற்போது, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பாலத்தில் இரும்பு உத்திரங்கள் பொருத்தும் பணிகள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் என்ற அமைச்சரின் ஆணைக்கிணங்க, நேற்று முன்தினம் நள்ளிரவில் பணிகள் தொடங்கியது. அமைச்சர் எ.வ.வேலு பணித் தளத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினார். 3.20 கி.மீ. நீளமுடைய இந்த […]

Loading

செய்திகள்

கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு அஞ்சலி; இரங்கல் தீர்மானம்

சென்னை, அக்.14– தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. கரூர் சம்பவத்தில் பலியான 41 பேரின் குடும்பத்துக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகளை வாசித்தார். மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களான புரட்சி மணி, குணசேகரன், கோவிந்தசாமி, அமர்நாத், […]

Loading

செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இந்து மகாசபா தலைவர் கைது

சென்னை, அக். 14– சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்து மகாசபா தலைவர் ஸ்ரீகந்தன் கைது செய்யப்பட்டார். சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீ என்கிற ஸ்ரீகந்தன். இவர் அகில இந்திய இந்து மகாசபா தலைவராக உள்ளார். இதனிடையே, கோடம்பாக்கம் புலியூரை சேர்ந்த பெண் இவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். அவர் தனது சகோதரன் மகளை அடிக்கடி ஸ்ரீகந்தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், சிறுமியை கானத்தூரில் உள்ள ஸ்ரீகந்தனின் மற்றொரு வீட்டிற்கும் அப்பெண் அழைத்து சென்றுள்ளார். அந்த […]

Loading

செய்திகள்

விஜய் கரூர் செல்ல ஏற்பாடு: புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழு

கரூர், அக். 14– விஜய் கரூர் செல்வதற்கான ஏற்பாட்டு பணிகளை கவனிக்க புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கரூரில் நடந்த த.வெ.க. பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கரூர் மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார்.மேலும் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் […]

Loading

செய்திகள்

ஐபிஎஸ் அதிகாரி பூரன் குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் ஆறுதல்

ஹரியானா, அக். 14– தற்கொலை செய்துகொண்ட ஐபிஎஸ் அதிகாரி பூரன் குமாரின் குடும்பத்தினரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். ஹரியானாவில் காவல்பயிற்சி மைய ஐஜி பூரன்குமார்(52) கடந்த 7ம் தேதி தமது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்பாக அவர் 8 பக்கம் கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்து இருந்தார். ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மற்றும் ரோஹ்தக் எஸ்பி நரேந்திர பிஜர்னியா உள்பட 8 மூத்த ஐபிஎஸ் […]

Loading