செய்திகள்

ஆவடி கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா அதிரடி நடவடிக்கை: 84 ரவுடிகள் கைது

ஆவடி, ஜன. 21: ஆவடி காவல்துறை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா அதிரடி நடவடிக்கை காரணமாக 15 நாட்களில் 84 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ஆவடி காவல் ஆணையரகத்தில் காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா, உத்தரவின் பேரில் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 1–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், குற்ற நடவடிக்கைக்காரர்களுக்கு எதிராகவும், கஞ்சா […]

Loading

செய்திகள்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்: தமிழ்நாடு மீனவர்கள் 7 பேர் கைது

சென்னை, ஜன. 21– தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மயிலாடுதுறையைச் சேர்ந்த 7 மீனவர்கள் நெடுந்தீவு […]

Loading

செய்திகள்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் எலி மருந்து சாப்பிட்ட பெண் பயணியின் உயிரை காப்பாற்றிய பெண் காவலர்

சென்னை, ஜன. 21– சென்மைன சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப்படை பெண் காவலரின் துரித நடவடிக்கையால் எலி மருந்து சாப்பிட்ட பெண் பயணியின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது? சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், நடை மேடை எண் 11-ல் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) பெண் காவலர் ஜிஷா, சுமார் 25 வயதுடைய ஒரு இளம் பெண் பயணி தனியாக அமர்ந்து அழுதுக் கொண்டிருப்பதை கவனித்தார். சந்தேகத்திற்குரிய […]

Loading

செய்திகள்

சிஎஸ்கே–திருவள்ளூர் கிரிக்கெட்: கொரட்டூர் எபினீசர் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது

திருவள்ளூர், ஜன. 2026: சிஎஸ்கே–திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (டிசிஏ) சார்பில் நடந்த 2025–26ம் ஆண்டுக்கான பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் கொரட்டூர் எபினீசர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி அணி, வேலம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த எபினீசர் பள்ளி அணி 30 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோரை உயர்த்தும் வகையில் ஏ. பரிநய் ஜெயின் (39) மற்றும் கே. தமிழ் செல்வம் […]

Loading

செய்திகள்

தி.மு.க எம்.எல்.ஏ. பொன்னுசாமி, ஏ.வி.எம். சரவணன் உள்ளிட்டோருக்கு இரங்கல் சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

சென்னை, ஜன. 21– சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. பொன்னுசாமி, ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, கவர்னர் உரையை சபாநாயகர் மு. அப்பாவு தமிழில் வாசித்தார். அந்த உரை […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்

சென்னை, ஜன. 21– ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அண்ணா திமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான வைத்திலிங்கம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுபட்ட அண்ணா தி.மு.க. என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார். ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாற்றுகட்சிகளில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். அவரது […]

Loading

செய்திகள்

பா.ஜ.க. தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நபின்

புதுடெல்லி, ஜன. 20: பா.ஜ.க.வின் தேசியத் தலைவராக நிதின் நபின் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பா.ஜ.க.வின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா கடந்த 2020 ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்றார். பா.ஜ.க.வில் தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிந்தபோதிலும், சில காரணங்களால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில், பீகார் மாநில மந்திரியாக இருந்த நிதின் நபின் (வயது 45), கட்சியின் செயல் தலைவராக […]

Loading

செய்திகள்

கவர்னர் வெளிநடப்பு சட்டசபையை அவமதிக்கும் செயல்: ஸ்டாலின் கண்டனம்

சென்னை, ஜன. 20: தமிழக சட்டசபையில் இருந்து கவர்னர் வெளிநடப்பு செய்தது சட்டசபையை அவமதிக்கும் செயல் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கவர்னர் உரையை வாசிக்காமல் அவையிலிருந்து வெளியேறிய நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசினார். அவர் பேசியதாவது:– தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் ஒரு முறை ஆளுநர் சட்ட விதிகளையும், மரபுகளையும் மீறி செயல்பட்டு அவையிலிருந்து வெளியே சென்றுள்ளார்; வெளியே என்று சொல்வதைவிட, வெளியேறிச் […]

Loading

செய்திகள்

சட்டசபை மரபு ஒருபோதும் மாற்றப்படாது: சபாநாயகர் விளக்க

சென்னை, ஜன. 20: தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அரசின் நிறை […]

Loading

செய்திகள்

சட்டசபையில் உரையாற்றாதது ஏன்? கவர்னர் மாளிகை விளக்கம்

சென்னை, ஜன. 20: பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்துள்ளது, ஒரே ஆண்டில் சுமார் 20,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழக சட்டசபையில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்து கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. சட்டசபையில் அரசு தயாரித்த உரையை கவர்னர் வாசிக்க மறுத்ததற்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:– ஆளுநரின் ஒலிவாங்கி (மைக்) மீண்டும், மீண்டும் அணைக்கப்பட்டது மற்றும் அவர் […]

Loading