செய்திகள்

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

வாஷிங்டன், அக். 23– ரஷ்யாவின் மிகப்பெரிய 2 எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். தற்போது ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: இந்த இரண்டு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை […]

Loading

செய்திகள்

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

சென்னை, அக். 23– வங்கக் கடலில் நாளை (24–ந்தேதி) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக 25–ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என அறிவித்துள்ளது. புதிதாக உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகுமா அல்லது வலுவிழக்குமா என்பதை இதன் நகர்வை பொருத்துதான் கணிக்கப்படும். நாளை உருவாகும் […]

Loading

செய்திகள்

ஆசியான் மாநாட்டை புறக்கணித்த மோடி: காணொலி மூலம் பங்கேற்கிறார்

கோலம்பூர், அக். 23– மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியான் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காணொலி மூலம் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாக மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மலேசியாவில் வரும் 26–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை 3 நாட்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரேசில் அதிபர் லூலா டி சில்வா உள்ளிட்ட முக்கியத் […]

Loading

செய்திகள்

சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு :

சென்னை 23: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]

Loading

செய்திகள்

திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி காலமானார்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. கடந்த சட்டமன்றத் தேர்தலில், சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பொன்னுசாமி. இவருக்கு ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட இருந்த நிலையில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை, வீட்டில் ஓய்வெடுத்து வந்த பொன்னுசாமிக்கு திடீரென்று இதயத்தில் வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு […]

Loading

செய்திகள்

சபரிமலைக்கு வந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடும் பாதுகாப்பில் இன்று ஐயப்பன் தரிசனம்

திருவனந்தபுரம், அக்டோபர் 22 குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக கேரளா சென்றுள்ளார். அவர் நேற்று மாலை திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். பின்னர் அவர் கவர்னர் மாளிகையில் தங்கியிருந்து ஓய்வெடுத்தார். இன்று காலை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக சபரிமலையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

Loading

செய்திகள்

அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும்: எடப்பாடி ‘தீபாவளி’ வாழ்த்து

சென்னை, அக்.19– நாளை தீபாவளி பண்டியையொட்டி அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில், சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன், திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாள் இருளை நீக்கி, ஒளியை […]

Loading

செய்திகள்

ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

திண்டிவனம், அக். 19– ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. மேலும் டாக்டர் ராமதாசின் ஆதரவாளரான ஆடுதுறை சேர்மன் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால் டாக்டர் ராமதாசிற்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் […]

Loading

செய்திகள்

தீபாவளி பண்டிகை: பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு

மதுரை, அக். 19– தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்கள், தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், மதுரை மலர் சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், வரத்து குறைவு காரணமாகவும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுரையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2000க்கு விற்பனை; பிச்சி ரூ.1800, முல்லை ரூ.1700க்கு விற்பனை. கனகாம்பரம் ரூ.1500, ரோஸ் ரூ.300, பட்டன் ரோஸ் ரூ.250,காத்திருக்கும் […]

Loading

செய்திகள்

ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்; 2 மகன்களை கழுத்தை நெரித்து கொன்று தந்தை தற்கொலை

தூத்துக்குடி, அக். 19– ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த என்ஜினீயர் தனது 2 மகன்களின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்கற்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவபூபதி (வயது 45). என்ஜினீயர். இவருடைய மனைவி பார்வதி (38). இவர்களுக்கு நரேந்திர பூபதி (14), லதீஷ் பூபதி (12) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். சிவபூபதி தனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் குறிஞ்சி நகர் […]

Loading