செய்திகள்

விண்ணில் பாய்ந்த ‘பாகுபலி’ ராக்கெட்: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

ஸ்ரீஹரிகோட்டா, நவ.3- 4,400 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளுடன் ‘பாகுபலி’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த உதவும். தகவல்தொடர்பு துறையில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வதற்காக ரூ.1,600 கோடி மதிப்பில் அதிக எடை கொண்ட சி.எம்.எஸ்-03 என்ற முதல் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. 4 ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், விண்ணில் செலுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட ‘பாகுபலி’ ராக்கெட் என்று கூறப்படும் ‘எல்.வி.எம்.3-எம்5’ ராக்கெட்டில் பொருத்தப்பட்டது. இதனையடுத்து […]

Loading

செய்திகள்

மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 23 பேர் பலி

ஹெர்மோசில், நவ. 2– மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பலியாகினர். வடமேற்கு மெக்சிகோவில் சோனோரா மாகாண தலைநகரான ஹெர்மோசில்லோவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 23 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவத்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் பலியானதாகக் கூறப்படுகிறது. பழுதடைந்த மின்மாற்றி வெடித்ததில் தீ விபத்து […]

Loading

செய்திகள்

மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி: இந்தியா – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

நவிமும்பை, நவ. 2– மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இன்று இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. மழை குறுக்கீட்டால் ஆட்டம் நாளை ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை […]

Loading

செய்திகள்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: 7–ந் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, நவ. 2– வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு மியான்மர் கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரண மாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி […]

Loading

செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லறை திருநாள் அனுசரிப்பு: கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

சென்னை, நவ. 2– தமிழகம் முழுவதும் இன்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. கல்லறை தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, கல்லறைத் தோட்டங்களில் உள்ள முன்னோர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபடுவர். மேலும், ஜெப வழிபாடு, சிறப்பு ஆராதனையும் நடைபெறும். அந்த வகையில், கத்தோலிக்க திருச்சபையினர் சார்பில் தாம்பரத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் உயிரிழந்தவர்களின் கல்லறைகளுக்கு சென்று மாலை […]

Loading

செய்திகள்

ஆலந்தூர் பகுதியில் போதைப் பொருள் பதுக்கல்: 4 பேர் கைது

சென்னை, நவ. 3– புனித தோமையர்மலை பகுதியில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் புனித தோமையர் மலை காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து ஆலந்தூர், மடுவங்கரை பாலம் அருகே கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 4 நபர்களை விசாரணை […]

Loading

செய்திகள்

1040வது சதய விழா; ராசராச சோழன் புகழ் போற்றுவோம்:

சென்னை, நவ. 2– மாமன்னர் இராசராச சோழன் புகழ் போற்றுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாமன்னர் ராசராச சோழனின் 1040வது சதய விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழர்களின் கலைத்திறன், போர்த்திறன், கப்பற்கலை, பாசனமுறை என அனைத்தின் உச்சமாக ஆட்சிசெய்து மங்காப் புகழொளியைத் தமதாக்கிக் கொண்ட மாமன்னர் இராசராச சோழனின் 1040-ஆவது சதய விழா இன்று. தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, நேற்றுமுதல் பல்வேறு நிகழ்ச்சிகளுடன், […]

Loading

செய்திகள்

பூஜ்ஜியங்கள் ஒன்று சேர்ந்து ராஜ்ஜியம் அமைக்க முடியாது: ஆர்.பி.உதயகுமார் தாக்கு

சென்னை, நவ.2– எத்தனை பூஜ்ஜியங்கள் ஒன்று சேர்ந்தாலும் ராஜ்ஜியங்கள் அமைக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். ஜெயலலிதா உத்தரவால் மூன்று முறை முதல்வராக இருந்தவரான, ‘அண்ணா தி.மு.க.,வின் விசுவாச தலைவர்’ என தன்னைத்தானே கூறிக் கொள்ளும் ஓ.பன்னீர் செல்வம், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று வாய் கூசாமல் சொல்கிறார். தி.மு.க., தலைவர் ஸ்டாலினை நடை பயிற்சியில் யதார்த்தமாக சந்தித்து, பின் வீட்டிற்கே விருந்தாளியாக சென்று தி.மு.க., ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்து பாடினார். […]

Loading

செய்திகள்

மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்

சென்னை, நவ. 1– அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளார். சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 05.30 மணி அளவில் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு நாள்; திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்: விஜய் வாழ்த்து

சென்னை, நவ. 1– திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாடு நாள் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்! மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்! 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்! தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் […]

Loading