செய்திகள்

சென்னை கே.கே.நகர்–கூடுவாஞ்சேரியில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் 2 புதிய விற்பனை நிலையம் திறப்பு

சென்னை, நவ. 26– சுத்தமான நெய் இனிப்புகள் மற்றும் காரஸ்களுக்குப் பெயர் பெற்ற ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சென்னையில் நாளை (27ந் தேதி) கே.கே. நகர் (காசி தியேட்டருக்கு எதிரே) அஞ்சுகம் நகர், 2வது தெரு, ஜாஃபர்கான் பேட்டை, மற்றும் கூடுவாஞ்சேரி (ஜிஆர்டி ஜூவல்லரிக்கு எதிரே) காந்தி வளாகம், ஜிஎஸ்டி சாலையில் 2 புதிய கிளைகளைத் திறக்கிறது. தொடக்க நாள் சலுகையில் 1 கிலோ இனிப்புகள் வாங்கும் போது 1 கிலோ மைசூர்பா பரிசாகக் கிடைக்கும். இந்த […]

Loading

செய்திகள்

மக்கள் பிரச்சினைகளுக்காக ஆங்காங்கே போராட்டம் நடத்துங்கள் மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி அறிவுறுத்தல்

சென்னை, நவ.26 சென்னை அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டமன்றத் தேர்தல் மற்றும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் எடப்பாடிபழனிசாமி பேசியதாவது:-– அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட செயலாளர்கள் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணியை முன்னுரிமை கொடுத்து பணியாற்ற வேண்டும். தங்களது மாவட்டத்தில் இருக்கின்ற, தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வாக்காளர் படிவம் கொடுக்கப்பட்டு விட்டதா? என்று ஆய்வு செய்ய […]

Loading

செய்திகள்

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்

சென்னை, நவ. 26– கே.ஏ. செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார். விஜய் முன்னிலையில் நாளை த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்ணா தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணா தி.மு.க. ஆட்சி காலத்தில் வனத்துறை, போக்குவரத்து துறை, […]

Loading

செய்திகள்

கார் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணத் தொகை: கடலூர் கலெக்டர் வழங்கினார்

கடலூர், நவ. 26– கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கார் விபத்தில் காயமடைந்த 2 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: கடலூர் வட்டத்தை சேர்ந்த கௌசல்யா மற்றும் அவரது கணவர் எள்ளப்பன் ஆகியோர் விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி 20.09.2025 அன்று காரில் பயணம் மேற்கொண்ட போது, ஐயூர் அகரம் பாலம் […]

Loading

செய்திகள்

பாலின சமத்துவ விழிப்புணர்வு பேரணி: விழுப்புரம் கலெக்டர் துவக்கி வைத்தார்

விழுப்புரம், நவ. 26– விழுப்புரம் மாவட்டம் மணம்புண்டியில் உள்ள முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்சார்பில் தேசிய அளவிலான பாலின சமத்துவ விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமூக ஒருங்கிணைப்பு பிரிவின் மூலம் பாலினம் தொடர்பான விழிப்புணர்வுகள், பயிற்சிகள் 37 மாவட்டங்களில் 388 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான […]

Loading

செய்திகள்

தங்கம் சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.93,760

சென்னை, நவ. 25– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.93,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 17ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்துக்கு சென்று, அதே மாதம் 28ந்தேதி ஒரு சவரன் ரூ.88,600 என்ற நிலைக்கும் வந்தது. அதன் பின்னரும், விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 110 […]

Loading

செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் தவறவிட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்பு

சென்னை, நவ. 25– சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 2025ம் ஆண்டில் ரெயில்வே பாதுகாப்புப் படையினர் ரூ.79,57,509 மதிப்புள்ள 1769 பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். தெற்கு ரெயில்வேயின் ரெயில்வே பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஸ்ரீ அருள் ஜோதியின் வழிகாட்டுதலின் கீழ், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் திருட்டு தடுப்பு மற்றும் பயணிகள் பாதுகாப்பு குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்சாரங்கள் பயணிகளுக்கு தங்கள் உடைமைகளைப் பாதுகாப்பது மற்றும் பயணத்தின் போது […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலையில் உலக சாதனையாக 1500 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற பரத தீபம் நிகழ்ச்சி

திருவண்ணாமலை நவ. 25-– திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி அருகிலுள்ள சந்தைமேடு மைதானத்தில் பரணி தீபத்தை வரவேற்கும் வகையில் உலக சாதனை நிகழ்வாக பரத தீபம் என்ற தலைப்பில் பரத நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட பரத நாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் அகல்விளக்கு, மலை, சிவசிவ என்ற வடிவில் பரத நாட்டிய கலைஞர்கள் நின்றபடி2 […]

Loading

செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 12 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: உதயநிதி வழங்கினார்.

திருவள்ளூர், நவ. 25– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி சுந்தர சோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 333.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 137.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 211 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,12,294 பயனாளிகளுக்கு 1000.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறுகின்ற இந்த பிரம்மாண்டமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் […]

Loading

செய்திகள்

மாற்றுத்திறனாளி மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை: வேலூர் கலெக்டர் உத்தரவு

வேலூர், நவ.25– மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டார். வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் 410 கோரிக்கை மனுக்களை பெற்றார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், […]

Loading