செய்திகள்

சபரிமலையில் பக்தர்களின் வருகை: 15 லட்சத்தை கடந்தது

பத்தனம்திட்டா, டிச. 4– கேரளம் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல–மகரவிளக்கு புனித யாத்திரைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேர் மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் […]

Loading

செய்திகள்

எம்.ஜி.ஆர். நகரில் பூட்டிய வீட்டில் ரூ.2.65 லட்சம் திருட்டு: சிறுவன் கைது

சென்னை, டிச. 4– எம்.ஜி.ஆர். நகர், ராமசாமி தெருவில் வசித்து வரும் சுந்தர்ராஜ் என்பவர் அன்னை சத்யா தெருவில் அவரது மாமனாரின் இறுதிசடங்கில் கலந்து கொள்ள, தனது வீட்டை பூட்டிவிட்டு, சாவியை வாசல் பகுதியில் மறைத்து வைத்துவிட்டு அவரது மனைவியுடன் சென்றுவிட்டார். பின்னர் மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவில் பூட்டு இல்லாமல் இருந்ததால், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.2.65 லட்சம் பணத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது. இது குறித்து எம்.ஜி.ஆர். நகர் […]

Loading

செய்திகள்

தன்னிறைவு, நவீனமயமாக்கலை நோக்கி முன்னேறி வரும் இந்திய கடற்படை

புதுடெல்லி, டிச. 4 இந்திய கடற்படை தன்னிறைவு மற்றும் நவீனமயமாக்கலை நோக்கி முன்னேறி வருகிறது. இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– இந்திய கடற்படை வீரர்கள் அனைவருக்கும் இந்த நாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நம் கடற்படை வீரர்கள் அசாதாரண தைரியம், உறுதி ஆகியவற்றின் அடையாளமாக திகழ்கின்றனர். நாட்டின் கடலோரங்களையும், கடல் வர்த்தக நலன்களையும் திறம்பட பாதுகாத்து வருகின்றனர். சமீப […]

Loading

செய்திகள்

தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைவு: ரூ.96,160க்கு விற்பனை

சென்னை, டிச. 4– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இதனால், ஒரு சவரன் ரூ. 96,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி (ஒரு சவரன் ரூ.97,600) புதிய உச்சத்தை தொட்டது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 40-க்கும், ஒரு […]

Loading

செய்திகள்

‘‘தமிழ்த் திரை உலகின் முதுபெரும் ஆளுமை; ‘‘ஏவிஎம்.க்கு புகழ் சேர்த்தவர் சரவணன்’’

: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் சென்னை, டிச. 4– ‘‘ஏவிஎம்க்கு புகழ் சேர்த்தவர் சரவணன்’’. தமிழ்த் திரை உலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவர் என்று முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியள்ளார். ஏவி.எம். சரவணனின் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:– ‘‘தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க ஏவிஎம் நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு […]

Loading

செய்திகள்

2ம் நாள் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் முடங்கியது

புதுடெல்லி, டிச. 2– நாடாளுமன்ற 2ம் நாள் கூட்டத்தொடரில் இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. வரும் 19ம் தேதி வரை நடக்கும் இந்த கூட்டத் தொடரில், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் செங்கோட்டையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம், புதிய தொழிலாளர் சட்டங்கள், எஸ்.ஐ.ஆர்., விவகாரம் ஆகியவற்றை விவாதிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் முதல் […]

Loading

செய்திகள்

தங்கம் ஒரு சவரன் ரூ.96,320க்கு விற்பனை

சென்னை, டிச.2– தங்கம் விலை இன்று ஒரு சவரன் ரூ.96,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்துக்கு சென்று, அதே மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.88,600 என்ற நிலைக்கு வந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,070-க்கும், சவரன் ரூ.96,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. […]

Loading

செய்திகள்

செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

சென்னை, டிச. 2– முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஆகியோருடன் கட்சி ஒருங்கிணைப்பு குறித்து பேசியதுடன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை சந்தித்ததால் அண்ணா திமுகவில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் கோபிசெட்டிபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த நிலையில், செங்கோட்டையன் வீட்டுக்கு தமிழக காவல்துறை தரப்பில் […]

Loading

செய்திகள்

புயல், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம்: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை, டிச.2-– புயல், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 27-ந்தேதி தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மறுநாளில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 14 மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று […]

Loading

செய்திகள்

சென்னையில் விடாது கொட்டியது கனமழை

சென்னை: 2 சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூர் 260 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை நகரின் பல பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்கிறது. தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழை நீர், சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றி வருகின்றனர். சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை நீர் இரவோடு இரவாக அகற்றப்பட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று […]

Loading