செய்திகள்

சென்னையில் 71 இண்டிகோ விமானகள் ரத்து

சென்னை, டிச. 8– சென்னையில் இன்று 71 இண்டிகோ விமானகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். உள்ளாட்டு விமான பயணங்களில் விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கான புதிய பணி நேரக்கட்டுப்பாடு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி விமானிகள் தொடர்ச்சியாக 18 மணி நேரம் வேலை பார்க்கலாம் என்ற விதியை திருத்தி 8 மணி நேரமாக குறைத்தது. விமானிகளின் விடுப்பு நேரம் முன்பு வாரத்திற்கு 36 மணி நேரமாக இருந்தது. அது தற்போது 48 […]

Loading

செய்திகள்

புதுச்சேரியில் நாளை விஜய்–மக்கள் சந்திப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட த.வெ.க.

சென்னை, டிச. 8– புதுச்சேரியில் நாளை நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும் என கட்சித் தொண்டர்களைத் தவெக தலைமை கோட்டுக்கொண்டுள்ளது. நம் வெற்றித் தலைவரின் ஒப்புதலோடு வழங்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்து கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– நாளை (9–ந்தேதி செவ்வாய்க்கிழமை) புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் ‘புதுச்சேரி மாநில […]

Loading

செய்திகள்

மெரினா கடற்கரையில் மீண்டும் களைகட்டிய ‘கலைவிழா’

சென்னை, டிச.8-– சென்னை மாநகராட்சி சார்பில் ‘மெரினாவில் கலைவிழா’ என்ற பெயரில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் வாரந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்படும் இந்த நிகழ்வு கடந்த வாரம் ‘டிட்வா’ புயல், கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. சென்னை இயல்புநிலைக்கு திரும்பியநிலையில், நேற்று மாலை மெரினாவில் உள்ள நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் வழக்கம்போல ‘கலைவிழா’ களைகட்டியது. தமிழகத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று […]

Loading

செய்திகள்

கடலூரில் கைவினைப் பொருட்கள்சிறப்பு விற்பனை கண்காட்சி கலெக்டர் சிபி ஆதித்யா துவக்கினார்

கடலூர், டிச. 8– தேசிய கைவினைப் பொருட்கள் வார விழாவினை முன்னிட்டு கடலூர், திருப்பாப்புலியூரில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைப் பொருட்கள் சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில், கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு, புதுடெல்லி, கொல்கத்தா உட்பட 13 விற்பனை நிலையங்களை நடத்தி வருவதோடு, கூடுதல் சந்தை வாய்ப்பாக இந்தியா […]

Loading

பாண்டிய கட்டபொம்மன்

வீரத்தின் விளைநிலம் பாண்டிய கட்டபொம்மன்

கட்டபொம்மன் –1 இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்மையான எழுச்சி தமிழ்நாட்டில் நிகழ்ந்ததற்கு காரணமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். சுயமரியாதை சிந்தனையை உயிருக்கும் நிகராக உயர்த்திப்பிடித்தவர். சுதந்திரத்தின் தீப்பொறி. மானம் காக்க மரணத்தை தழுவியவர். அதிநவீன ஆயுதங்கள் ஏந்தி வந்த ஆங்கிலேயர்கள், கட்டபொம்மனின் போர்க்கலையில் திணறி நின்றனர். நேருக்கு நேர் கட்டபொம்மனை வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள், அவரது வீரத்தை தோற்கடிக்க துரோகத்தை நாடினர். துரோகத்தால் வீழ்ந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன். வரலாறு துரோகத்தை தின்று […]

Loading

செய்திகள்

முழு தகவல் தெரியாமல் பேசக் கூடாது; ராகுலுக்கு மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு பதிலடி

புதுடில்லி, டிசம்பர் 7:இண்டிகோ விமான சேவைகள் ரத்து விவகாரம் தொடர்பாக முழு தகவல் அறியாமல் கருத்து கூறக் கூடாது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு. இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில்,“இது அரசியல் விவகாரம் அல்ல; பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்னை. போட்டியை அதிகரிக்கவும், ஒப்பந்தச் செலவுகளை குறைக்கவும், புதிய விமானங்களை அனுமதிக்கும் விதமாக சட்ட திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். நாட்டில் விமான சேவைகளின் […]

Loading

செய்திகள்

ரூ. 36,660 கோடி முதலீடு; 91 ஒப்பந்தங்கள் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

மதுரையில் நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மதுரை, டிச. 7– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று மதுரையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் ரூ.35,560.15 கோடி முதலீட்டில், 52,060 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 46 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், ரூ.1,100.20 கோடி முதலீட்டில் 4,706 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 45 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், என மொத்தம், […]

Loading

செய்திகள்

கோவா நைட் கிளப்பில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து: 25 பேர் உடல் கருகி பலி

கோவா: வட கோவாவின் ஆர்போரா பகுதியில் அமைந்துள்ள பிரபல நைட் கிளப் ஒன்றில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50 பேர் படுகாயம் அடைந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்குள்ள சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக நைட் கிளப் […]

Loading

செய்திகள்

சென்னையில் போதைப் பொருள் விற்பனை:

பெங்களூருவில் பதுங்கியிருந்த 2 வெளிநாட்டு ஆசாமிகள் உள்பட 3 பேர் கைது சென்னை, டிச. 8– வானகரம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த வழக்கில் 8 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்பில் இருந்த சூடான் மற்றும் நைஜீரியா நாட்டைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டன. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு சென்னை பெருநகரில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகளையும், வலைபின்னல் தொடர்புகளில் உள்ளவர்களையும் […]

Loading

செய்திகள்

விமான கட்டணத்தை அதிகபட்சம் ரூ.18 ஆயிரம் வரை வசூலிக்க மத்திய அரசு உத்தரவு

இண்டிகோ விமானங்கள் ரத்து எதிரொலி புதுடெல்லி, டிச.7- இண்டிகோ விமானங்கள் ரத்து காரணமாக கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனையடுத்து கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதிகபட்சம் ரூ.18 ஆயிரம் வரை வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் பணியாளர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. அட்டவணையிடப்பட்ட விமானங்களை இயக்க விமானிகள் மற்றும் பிற பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை. இதனால் அந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த […]

Loading