செய்திகள்

சோனியா காந்தி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, டிச.9– சோனியா காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– காங்கிரஸ் பேரியக்கத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி அம்மையாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தியாகம், தன்னலமற்ற பொதுவாழ்வுப் பயணம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநாட்டும் உறுதியைப் பிரதிபலிப்பதாக அவரது வாழ்க்கை அமைந்துள்ளது. முற்போக்கான, அனைவருக்குமான இந்தியாவை நோக்கிய நமது கூட்டு […]

Loading

செய்திகள்

சோனியா காந்தி பிறந்த நாள்: மோடி வாழ்த்து

புதுடெல்லி, டிச. 9– காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி 20 ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராக செயல்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சோனியா காந்தி இன்று தனது 79வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சோனியா காந்தி இத்தாலியின் லூசியானா நகரில் 1946ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி பிறந்தார். இன்று சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சோனியாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து […]

Loading

செய்திகள்

மீண்டும் தி.மு.க. ஆட்சி தான்’’: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

சென்னை, டிச.9- எத்தனை அணிகள் செயல்பட்டாலும் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் அமையும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சட்டமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. அனைத்து வகையிலும் தயாராகிவிட்டது. வெற்றி இலக்கை அடைய, ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பெயரில் தி.மு.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏற்கனவே நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக காணொலி காட்சி மூலம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இந்த […]

Loading

செய்திகள்

சம்பளதாரர்களுக்கான கடன் அட்டை: சிட்டி யூனியன் வங்கி அறிமுகம்

கும்பகோணம், டிச. 8– மாதச் சம்பளம் வாங்குவோருக்கான பிரத்யேக கடன் அட்டையை (கிரெடிட் காா்ட்) தனியார் துறையைச் சேர்ந்த சிட்டி யூனியன் வங்கி அறிமுகப்படுத்தியது. இது குறித்து சிட்டி யூனியன் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– இந்தியாவின் முன்னணி சம்பளம் சார்ந்த நிதி சேவைத் தளமான ‘சேலரிசீ’யுடன் இணைந்து ‘லெவல் அப்’ கடன் அட்டையை சிட்டி யூனியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. மாதச் சம்பளம் வாங்குவோருக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் கடன் அட்டை இது. ‘கிரெடிட் ஆன் […]

Loading

செய்திகள்

ரூ.99 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் மீன் இறங்குதளம் மீன் விதைப் பண்ணை ஸ்டாலின் திறந்தார்

சென்னை, டிச.8– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 98 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளம் மற்றும் புதிய மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் 60 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பெரியநாயகி தெரு மீனவ கிராமத்தில் 26 கோடி ரூபாய் செலவில் தூண்டில் வளைவுடன் […]

Loading

செய்திகள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மெரீனா பீச்சில் உள்ள சமாதிகளை அகற்றுவோம் சீமான் ஆவேசம்

உளுந்தூர்பேட்டை, டிச. 8– ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றுவோம்’ என்று சீமானம் ஆவேசமாகப் பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பும் சமூக நீதியும் பஞ்சமர் நில மீட்பும் மற்றும் தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றமும் என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- நாங்கள் […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து தவிக்கும் 4 குழந்தைகளுக்கு வீடு, பணி நியமன ஆணை, நிதியுதவி முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, டிச.8– கள்ளக்குறிச்சி மாவட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்களை இழந்த 4 குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு. பணிநியமன ஆணை, அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் நிதியுதவி, திறன் பயிற்சிக்கான உதவித்தொகை ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் 14.11.2025 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது […]

Loading

செய்திகள்

டி.ஜி. வைணவக் கல்லூரியில் தேசிய மாணவர் படை வீரர்களுக்கான 14–வது தேசிய கருத்தரங்கு முதல்வர் எஸ்.சந்தோஷ்பாபு துவக்கி வைத்தார்

சென்னை, டிச. 8– சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைணவக் கல்லூரியில் தேசிய மாணவர் படை வீரர்களுக்கான 14–வது தேசிய கருத்தரங்கை முதல்வர் எஸ்.சந்தோஷ்பாபு துவக்கி வைத்தார். துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரியின் தமிழ்நாடு தேசிய மாணவர் கவசப் படைப் பிரிவு –1″ தேசிய மாணவர் படை வீரர்களுக்கான தொழில் வாய்ப்புக்கான வழிகாட்டல் என்னும் பொருண்மையில் 14-வது தேசிய கருத்தரங்கத்தைச் சிறப்பாக நடத்தியது. தொடர்ச்சியாக பதினான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியை, முன்னாள் இணை தேசிய மாணவர் […]

Loading

செய்திகள்

மலையாள நடிகை பாலியல் பலாத்கார வழக்கு நடிகர் திலீப் விடுதலை

திருவனந்தபுரம், டிச. 8– ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர வைத்த கேரள நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டார். பல்சர் சுனி உள்பட 6 பேர் குற்றவாளிகள் என எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். திருச்சூரிலிருந்து கொச்சிக்குச் செல்லும்போது அந்த நடிகையை ஆறு நபர்கள் கடத்தியுள்ளனர். பல்சர் […]

Loading

செய்திகள்

சிதம்பரம் வீனஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சிதம்பரம், டிச. 8– சிதம்பரம் வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி – -2025 பள்ளியின் தாளாளர் சா.குமார், துணைத் தாளாளர் ஏ.ரூபியால் ராணி மற்றும் பள்ளியின் முதல்வர் எஸ்.லியோ பெஸ்கி ராவ் முன்னிலையில் சிறப்பாக தொடங்கப்பட்டது. பல துறைகளின் அறிவுத் திறன்களை ஒரே மேடையில் வெளிப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இக்கண்காட்சி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டைப் பெற்றது. கண்காட்சியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கணினி அறிவியல் […]

Loading