செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் : அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை, டிச. 11: சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.59 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் உதவி உபகரணங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். சென்னை, சைதாப்பேட்டை, ஜோன்ஸ் ரோடு, சென்னை பெண்கள் (மாந்தோப்பு) மேல்நிலைபள்ளியில் தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் உதவி உபகரணங்கள் வழகும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தென் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட […]

Loading

செய்திகள்

தொண்டர்களுக்கு ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள்

மதுரை, டிச. 11: அண்ணா தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களையும் அம்மா பேரவையின் சார்பில் நடைபெறும் 44 வார திண்ணைப் பிரச்சாரத்தில் மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா தி.மு.க. அம்மா பேரவை போர்ப்படை வீரர்கள் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட கடுமையாக உழைத்து வருகிறீர்கள். தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா […]

Loading

செய்திகள்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 19-வது உற்பத்தி மாநாடு: முன்னாள் நீதிபதி சதாசிவம் துவக்கி வைத்தார்

வேலூர், டிச. 11: இந்தியா உலகளாவிய உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக உருவெடுத்து வருகிறது என்று சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசினார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறை சார்பில் 19- வது உலகளாவிய உற்பத்தி மற்றும் மேலாண்மை குறித்த மூன்று நாள் மாநாட்டை சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா முன்னாள் ஆளுநருமான துவக்கி வைத்து பி.சதாசிவம் பேசியதாவது: உற்பத்தித் துறை என்பது ஒரு தொழில்துறை மட்டுமல்ல. வலுவான பொருளாதாரத்திற்கு […]

Loading

செய்திகள்

அகில இந்திய புதுமை கண்டுபிடிப்புப் போட்டி-:

20 கல்லூரிகளின் 25 அணிகளில் 200க்கும் மேல் மாணவர்கள் பங்கேற்பு தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமையில் பீடு நடை சென்னை, டிச. 11– தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் ‘‘அகில இந்திய புதுமை கண்டுப்பிடிப்பு போட்டி -2025’’ கல்லூரி வளாகத்தில் துவங்கியது. கல்வி குழுமங்களின் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார். பொறியியல் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அகில இந்திய தொழில் நுட்ப கழகம் சார்பில் […]

Loading

செய்திகள்

புதுச்சேரியில் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு

புதுச்சேரி, டிச. 10– புதுச்சேரியில் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சராக ரங்கசாமி இருந்து வருகிறார். அடுத்த ஆண்டு புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி அரசு ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. பச்சரிசி, நாட்டு சர்க்கரை, பாசிப்பருப்பு, […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. ஒன்றிணைய வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

தேனி, டிச. 10: அண்ணா தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார். சட்டசபை தேர்தலை சந்திக்க அதிமுக தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அண்ணா தி.மு.க. பொதுக்குழுவின் தீர்மானங்கள் முழுமையாக வந்தபிறகு அதுகுறித்து நான் பேசுகிறேன். தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அனைவருமே பிரிந்து […]

Loading

செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை

ராமேஸ்வரம், டிச. 10: வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழக கரையோர பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசி வருகிறது. மணிக்கு சுமார் 50 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை கடல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதே போல், ராமேசுவரம், மண்டபம் பகுதியில் இன்று கடல் காற்றின் வேகம் சுமார் 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் […]

Loading

செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாதது ஏன் விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு

மதுரை, டிச.10: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏன் ஏற்றவில்லை என்பது பற்றி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், கூடுதல் டி.ஜி.பி. ஆகியோர் 17-ந்தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மதுரை திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தர விடக்கோரி மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கார்த்திகை தீப திருநாளன்று திருப்பரங்குன்றம் […]

Loading

செய்திகள்

42 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதிய ஆணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, டிச. 10– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார். தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் என்பது நினைவிருக்கலாம். திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றப்பின், செய்தி மக்கள் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நாளையுடன் நிறைவு

சென்னை, டிச.10: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நாளையுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்று வருகின்றன. வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்த வாக்காளர்களின் பெயர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் பெயர்கள் ஆகியவற்றை நீக்கி, தகுதியுள்ள பட்டியலாக மாற்ற, இந்த எஸ்.ஐ.ஆர். மூலம் இந்திய தேர்தல் கமிஷன் மும்முரம் காட்டி வருகிறது. தற்போது 6.41 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ள பட்டியலில், […]

Loading