செய்திகள்

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்

வேலூர், டிச. 17– வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்தார். நேற்று முதல் 22–ந்தேதி வரை தமிழ்நாடு, கேரளம், தெலுங்கானா, ஆந்திரம் ஆகிய இடங்களுக்கு ஜனாதிபதி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக வேலூர் ஸ்ரீபுரத்துக்கு ஜனாதிபதி இன்று காலை 11.20 மணிக்கு வருகை தந்தார். தங்கக் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட்டில் வந்திறங்கிய ஜனாதிபதியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், […]

Loading

செய்திகள்

வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.11,000 உயர்ந்த வெள்ளி

சென்னை, டிச. 17– வெள்ளி ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 11 ஆயிரம் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதே நேரத்தின் தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 400 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 99,200-க்கும் கிராமுக்கு ரூ. 50 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 12,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து 222 ரூபாய்க்கும் […]

Loading

செய்திகள்

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது வழங்கி கவுரவம்

140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என பெருமிதம் அடிஸ் அபாபா, டிச. 17– எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜோர்டான் நாட்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி சென்றார். அவருக்கு அடிஸ் அபாபா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் அபய் அகமது அலி நேரில் வந்து பிரதமர் மோடியை […]

Loading

செய்திகள்

எண்ணெய் வயல்களை ஒப்படைக்க வேண்டும்; வெனிசுலாவுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், டிச.17– வெனிசுலாவில் அமெரிக்கா உருவாக்கிய எண்ணெய் வயல்களை ஒப்படைக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளார். வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக போதைப்பொருட்களை கடத்தி வரும் கப்பல்களை அமெரிக்கா தாக்கி அழித்து வருகிறது. இதையடுத்து, வெனிசுலா நாட்டுக்கு எதிராக சில தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. மேலும், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை பதவி விலகுமாறு அதிபர் டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள், இருநாடுகளிடையே பதற்றத்தை […]

Loading

செய்திகள்

நேஷனல் ஹெரால்டு வழக்கு: மோடி, அமித்ஷா பதவி விலக கார்கே வலியுறுத்தல்

புதுடெல்லி, டிச. 17– நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் நிராகரித்துள்ளதற்கு பிறகு மோடியும், அமித்ஷாவும் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். இந்த வழக்கின் நோக்கம், காந்தி குடும்பத்தை துன்புறுத்தவும், எதிர்க்கட்சிகளை குறிவைப்பதும்தான் என்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை […]

Loading

செய்திகள்

சென்னையில் நாளை அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா

பூந்தமல்லி, டிச.17– அண்ணா தி.மு.க. சார்பில் 18–ந் தேதி (நாளை) நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமிக்கு மாபெரும் வரவேற்பு அளிக்க முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் ஏற்பாடு செய்துள்ளார். திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் முகப்பேர் மேற்கு பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் தி.ப.கண்ணன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளரும், மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான ராயபுரம் ஆர்.மனோ, முன்னாள் எம்.பி. ஜெகந்நாதன், முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன், […]

Loading

செய்திகள்

பயிர் விளைச்சலில் சாதனை: 34 விவசாயிகளுக்கு விருது

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார் சென்னை, டிச.17– மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்ற 31 விவசாயிகள் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது போட்டிகளில் வெற்றி பெற்ற 3 விவசாயிகளுக்கு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விருதுகள் வழங்கினார் பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு இடையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தொடர் மற்றும் சீரிய முயற்சிகளின் காரணமாக இருபோக சாகுபடி பரப்பு மற்றும் பாசன வசதி பெறும் பரப்பானது கணிசமாக உயர்ந்து வருவதுடன் […]

Loading

செய்திகள்

மணலி ஏரியில் ரூ.6.70 கோடியில் செய்த புனரமைப்புப் பணிகள்:

ஏரி நிரம்பி ரம்மியமாக காட்சி சென்னை, டிச.17– சென்னை மணலி ஏரியில் ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளின் காரணமாக தற்போது பெய்த மழையினால் ஏரியில் நீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. மணலி மண்டலம், வார்டு -20க்கு உட்பட்ட மணலி ஏரியில் 29 ஏக்கர் பரப்பளவில் (1,17,160 சதுர மீட்டர்) 1.20 மீ. ஆழத்துடன் 4 லட்சம் கனஅடி நீர்த்தேக்கம் உடையதாக இருந்தது. இதில் தற்போது அம்ரூத் மற்றும் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ், ரூ.6.70 […]

Loading

செய்திகள்

நீதி கிடைக்க பா.ம.க. போராட்டம் நடத்தும் அன்புமணி ராமதாஸ் அறிக்கை

தர்மபுரி, டிச.16: தர்மபுரியில் பள்ளி மாணவி உடற்கல்வி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை மூடி மறைக்க ரூ. 10 லட்சம் வாங்கிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கட்டப்பஞ்சாயத்து செய்வதுதான் திமுகவின் நீதியா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும். அவரின் தவறை மூடி மறைக்கும் வகையில் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்களும், அதற்கு துணை நின்ற கல்வித்துறை அதிகாரிகள் […]

Loading

செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, டிச. 16: தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (16–ந்தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தென் தமிழகத்தில் ஒருசில […]

Loading