செய்திகள் முழு தகவல்

“எம்.ஜி.ஆருக்கு அடுத்தது விஜய்–தான்”: ஈரோட்டில் செங்கோட்டையன் பெருமிதம்

ஈரோடு, டிச. 18: மக்களுக்காக புரட்சித் தலைவருக்குப் பிறகு புரட்சித் தளபதிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். தவெக தலைவர் விஜய் 500 கோடி வருமானத்தை விட்டுவிட்டு மக்களுக்கு சேவையாற்ற வந்துள்ளார் என்றும் அவர் கூறினார். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளையில் இன்று தவெக சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக தவெக தலைவர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக […]

Loading

செய்திகள்

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.62 கோடி

பழனி, டிச. 18: பழனி முருகன் கோவிலி்ல் ரூ. 2.62 கோடி உண்டியல் காணிக்கை வந்துள்ளது. அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் திரளான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் கோவிலில் தரிசனம் முடித்த பின்பு, அங்குள்ள உண்டியல்களில் பணம், நகை, நவதானியங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன், அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பங்கள்: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் 2 மாநாடு

சென்னை,, டிச.18: சென்னை ராமாபுரம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பில் தகவல் தொடர்பு கணினி பொறியியல் தொழில்நுட்பத்துறை சார்பில் இயந்திர நுண்ணறிவு மற்றும் அடுத்த தலைமுறைகளுக்கான தொழில் நுட்பங்கள் குறித்த 2 நாள் சர்வதேச மாநாடு ஓமன் சுல்தானகத்தின் மஸ்கட் கல்லூரியுடன் இணைந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் டிசம்பர் 17 மற்றும் 18 இரண்டு நாள் மாநாடு ராமாபுரம் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்கள் குழும தலைவர் முனைவர் ஆர். சிவக்குமார் மற்றும் இணை தலைவர் முனைவர் எஸ்.நிரஞ்சன் ஆகியோர் தலைமையில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025: சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சாதனை

சென்னை, டிச. 18: சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள், தேசிய அளவில் நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 போட்டியில் முதல் இடத்தை பெற்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் ரூ.1.5 லட்சம் ரொக்க பரிசையும் வென்றுள்ளனர். இந்த வெற்றி, சிக்கிம் மாநில சுற்றுலாத் துறைக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப தீர்வின் மூலம் கிடைத்தது. “சிக்கிம் மடாலயங்களை டிஜிட்டல் வடிவில் மாற்றி, சுற்றுலா மற்றும் பண்பாட்டு பாதுகாப்புக்காக வெளிப்படுத்துதல்” என்ற அரசின் அதிகாரப்பூர்வ பிரச்சினைத் தலைப்பில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. நாடு முழுவதிலிருந்தும் பல அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், பல கட்ட மதிப்பீட்டுக்குப் பிறகு 5 அணிகள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. […]

Loading

செய்திகள்

ஓ.என்.ஜி.சி. குரூப் நிறுவனத்துக்கு 50 கோடி டாலர் கடன்: பரோடா வங்கி வழங்க ஒப்பந்தம்

சென்னை, டிச. 18: பரோடா வங்கி ஓ.என்.ஜி.சி. விதேஷ் (ஓவிஎல்) முழு உரிமை துணை நிறுவனமான ஓவிஎல் ஓவாசீஸ் (ஓஓஐஎல்) நிறுவனத்துக்கு 50 கோடி டாலர் அளவிலான 5 ஆண்டு வெளிநாட்டு நாணய காலக் கடன் வசதிக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:– இந்த 50 கோடி டாலர் வசதிக்கான ஒப்பந்தம், பரோடா வங்கியின் ஒருங்கிணைந்த வெளிநாட்டு நாணய கடன் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த பரிவர்த்தனை, கிப்ட் சிட்டியின் வளர்ச்சி […]

Loading

செய்திகள்

தேர்தல் வருவதால் ‘லேப்டாப்’ நாடகம் நடத்துகிறார் ஸ்டாலின்: எடப்பாடி கடும் கண்டனம்

சென்னை, டிச.18: நான்கரை ஆண்டுகளாக மாணவர்களை வஞ்சித்துவிட்டு இப்போது தேர்தல் வருவதால் மாணவர்களுக்கு ‘லேப்டாப்’ வழங்க நாடகத்தை அரங்கேற்றுகிறார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார். ஜெயலலிதா, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அனைத்து வகைகளிலும் அறிவுப்பூர்வமாக கல்வி பயின்று, தங்களது வாழ்க்கையில் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தமது ஆட்சிக் காலத்தில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி சாதனை படைத்தார். ஜெயலலிதா வழியில் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும், […]

Loading

செய்திகள்

உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு நிவாரண நிதி, பணி நியமன ஆணை: அமைச்சர் நாசர் வழங்கினார்

திருவள்ளூர், டிச. 18: திருத்தணி அருகே சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினையும் மற்றும் மாவட்ட மகமை சார்பில் வெளிச்சந்தையில் பணி நியமன ஆணையினையும் அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொண்டாபுரம் ஊராட்சி;யில் அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோஹித் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது […]

Loading

செய்திகள்

நாளை தமிழகத்தை ஆள போவது விஜய் தான்: செங்கோட்டையன் உறுதி

ஈரோடு, டிச. 18: புரட்சி தலைவருக்குப் பிறகு புரட்சி தளபதியை காண்கிறேன். 234 தொகுதிகளிலும் விஜய் யாரை காட்டுகிறாரோ அவர்தான் தமிழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர் என்று செங்கோட்டையன் உறுதிபட கூறினார். கரூர் துயரச் சம்பவத்திற்குப் பிறகு 81 நாட்கள் கழித்து, தமிழ்நாட்டில் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் தவெக தலைவர் விஜய். அண்ணா தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டில் இன்று மக்கள் சந்திப்பு நடைபெற்றது. பெருந்துறை – […]

Loading

செய்திகள்

வடபழனி – காவேரி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் இரைப்பை, கல்லீரல் நோய் , சிகிச்சை பிரிவு துவக்கம்

சென்னை, டிச.18: பல்துறை சிகிச்சையில் சென்னையின் முன்னணி மருத்துவமனையான வடபழனி காவேரி மருத்துவமனை, ‘காவேரி செரிமான மண்டல அறிவியல் மையம் என்றசிகிச்சை பிரிவை தொடங்கியுள்ளது. இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு ஒருங்கிணைந்த மற்றும் ஆதாரப்பூர்வமான சிகிச்சையை வழங்குவதோடு, அனைத்து வயதினருக்கும் ஏற்ற வாழ்க்கை முறை சார்ந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் இம்மையம் சிறப்பு கவனம் செலுத்தும். மக்கள் தொகையில் 70% பேர் அமிலத்தன்மை, வயிறு உப்புசம், மலச்சிக்கல் அல்லது செரிமானக் கோளாறுகளை எதிர்கொள்கின்றனர், ஆனால் குறைவான […]

Loading

செய்திகள்

ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க ஜி.கே. மணிக்கு நோட்டீஸ்

சென்னை, டிச. 18: பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்ட்டுள்ளது. அன்புமணி தலைமையில் செயல்படும் பா.ம.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது- பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அவரது அண்மைக்கால செயல்பாடுகள் எல்லைக் கடந்தவையாக இருப்பதால், அதற்காக […]

Loading