செய்திகள்

ஸ்டாலின், எடப்பாடி சந்தித்து விஜயகாந்த் குருபூஜை அழைப்பிதழ் வழங்கினார் எல்.கே.சுதீஷ்

சென்னை, டிச.26- ஒரேநாளில் அடுத்தடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேரில் சந்தித்த எல்.கே.சுதீஷ், விஜயகாந்த் குருபூஜையில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழை அவர்களுக்கு வழங்கினார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இருப்பினும், தே.மு.தி.க. இதுவரையிலும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. வருகிற ஜனவரி 9-ந் தேதி கடலூரில் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட உள்ளார். […]

Loading

செய்திகள்

மத்திய மந்திரி அமித்ஷா 9-ந்தேதி தமிழகம் வருகை

சென்னை, டிச.26- அண்ணா தி.மு.க.–பா.ஜ.க. தலைவர்கள் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா, 9-ந்தேதி தமிழகம் வருகிறார். புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவருடன் கூட்டணி தலைவர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணி தயாராகி வருகிறது. கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கவும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவும் பியூஸ்கோயல் உள்ளிட்ட 3 மத்திய மந்திரிகளை கொண்ட தேர்தல் குழுவை பா.ஜனதா அகில இந்திய தலைமை அமைத்தது. மத்திய அமைச்சர் […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, டிச.26-– அண்ணா தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளன. அண்ணா தி.மு.க. தலைைமயிலான கூட்டணியில் பாரதீய ஜனதா மட்டும் தற்போது இடம் பெற்றிருந்தாலும், விரைவில் சில கட்சிகள் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாரதீய ஜனதாவின் மத்திய மந்திரி பியுஷ் கோயலுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி […]

Loading

செய்திகள்

சென்னையில் 4 ஆயிரம் மையங்களில் 2 நாள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

சென்னை, டிச.26-– வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நாளை (சனிக்கிழமை) மற்றும் நாைள மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. சென்னையில் 4 ஆயிரம் மையங்களில் நடக்கிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி கடந்த 14-ந்தேதி வரை நடந்தது. இதனை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து […]

Loading

செய்திகள்

ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வரும் புதிய வருமான வரிச் சட்டம்

புதுடெல்லி, டிச.26- புதிய வருமானவரி சட்டம், ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது. அதன்படி, ரூ.12 லட்சம்வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது. தற்போதைய வருமானவரி சட்டம், கடந்த 1961-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. காலத்துக்கு ஏற்ப இந்த சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்காகவும், பல்வேறு சட்டப்பிரிவுகள் மற்றும் வார்த்தைகளை எளிமைப்படுத்து வதற்காகவும் இந்த ஆண்டு புதிய வருமானவரி மசோதா-2025, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்று விட்டது. […]

Loading

செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை: தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

சென்னை, டிச. 25: தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ தேவாலயங்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. ஸ்டார்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளன. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றதால் அதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கரைபுரண்டது. மக்கள் ஒருவொருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவு முழுக்க கூடுதல் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட […]

Loading

செய்திகள்

மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக் உள்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை, டிச. 25: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 7 பேருக்கு தலைமைச் செயலர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக்; பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனர் ஜெயா; மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் செந்தில்குமார்; தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் தலைவர் சந்தியா வேணுகோபால் ஷர்மா; நிதித்துறை செயலர் உதயசந்திரன்; மத்திய அரசு பணியில் உள்ள ஹிதேஷ் குமார் மக்வானா; பள்ளிக் கல்வித்துறை செயலர் சந்திரமோகன் ஆகியோருக்கு, வரும் ஜனவரி […]

Loading

செய்திகள்

ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும்: நெதன்யாகு திட்டவட்டம்

ஜெருசலேம், டிச. 25: இஸ்ரேல் ராணுவத்தினர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு, நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலால் நிலைகுலைந்து போன காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இதனிடையே, அமெரிக்க அதிபர் […]

Loading

செய்திகள்

பொங்கலுக்கு பிறகு வலுவான கூட்டணி உருவாகும்: நயினார் நாகேந்திரன்

கிருஷ்ணகிரி, டிச. 25: பொங்கலுக்கு பிறகு வலுவான கூட்டணி உருவாகும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்கிற சுற்றுப் பயண யாத்திரையை நேற்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டார். நேற்று இரவு கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் நடந்த பிரச்சார நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- 100 நாட்கள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறினார். ஆனால், 100 நாள் […]

Loading

செய்திகள்

கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிப்பு: இந்தியா கண்டனம்

கம்போடியா, டிச. 25: கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்டதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. கம்போடியாவுடன் எல்லை பிரச்னை நீடித்து வரும் நிலையில் தாய்லாந்து ராணுவ வீரர்கள் கம்போடிய பகுதியில் இருந்த விஷ்ணு சிலையை இடித்து அகற்றியது அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. 29 அடி உயரமான இந்த விஷ்ணு சிலையை தாய்லாந்து ராணுவத்தினர் இடித்து அகற்றிய சம்பவம் இருநாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் […]

Loading