செய்திகள்

புதுப்பாக்கம் ஊராட்சி நாற்றங்கால் பண்ணையில் வளர்க்கப்படும் மரக்கன்றுகள்: கலெக்டர் ஆய்வு

ராணிப்பேட்டை, டிச.27– ராணிப்பேட்டை மாவட்டம் புதுப்பாக்கம் ஊராட்சியில் கூடுதல் வட்டார நாற்றங்கால் பண்ணையில் பல்வேறு வகையான மரக் கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளதை கலெக்டர் சந்திரகலா நேரில் ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சந்திரகலா திமிரி ஊராட்சி ஒன்றியம் அகரம் ஊராட்சியில் கலவை மடுவு ஆற்றின் குறுக்கே மாநில சிறப்பு நிதி திட்டத்தில் ரூ.4.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணியை பார்வையிட்டு பணிகள் விரைவாக மேற்கொள்ள கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பென்னகர் ஊராட்சியில் மகாத்மா […]

Loading

செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு கடன் திறன் மதிப்பீட்டு அறிக்கை: கலெக்டர் சிபி ஆதித்யா வெளியிட்டார்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கியின் மூலம் 2025–-26 நிதியாண்டில் கடலூர் மாவட்டத்திற்கான ரூ.27,434.05 கோடி கடன் திறன் மதிப்பீட்டு அறிக்கையினை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது, 2026–-27 நிதியாண்டிற்கான கடலூர் மாவட்டத்திற்கானகடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) கணித்து வெளியிட்டுள்ளது. இது நடப்பு ஆண்டின் ஆண்டு கடன் திட்டத்துடன் (ACP) ஒப்பிடும்போது 18% அதிகரிப்பாகும். […]

Loading

செய்திகள்

திண்டுக்கல் ரியல் எஸ்டேட் அதிபரிடம் கேரள சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

சபரிமலை தங்கம் அபகரிப்பு வழக்கு: திண்டுக்கல், டிச.27-– சபரிமலை தங்கம் அபகரிப்பு வழக்கு தொடர்பாக திண்டுக்கல் ரியல் எஸ்டேட் அதிபரிடம் கேரள சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். சபரிமலை அய்யப்பன் கோவிலில் சன்னிதான முகப்பில் துவார பாலகர் சிலை கவசம், கதவு நிலைகளில் தங்க முலாம் பூசப்பட்டு இருந்தது. இவை கடந்த 2019–-ம் ஆண்டு பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்டன. அப்போது அவற்றில் இருந்த தங்கம் அபகரிக்கப்பட்டது. அதற்கு அப்போதைய அதிகாரிகளும் உடந்தையாக இருந்தது அம்பலமானது. […]

Loading

செய்திகள்

கோவை மாவட்டத்தில் 12 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: கோவை, டிச.27- கேரளாவில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டதை தொடர்ந்து தமிழக-கேரள எல்லையில் 12 சோதனைச்சாவடிகள் அமைத்து கால்நடைத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் கோழி, வாத்து, காடை பண்ணைகள் உள்ளன. இந்த நிலையில் இந்த பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள் திடீரென்று அதிக எண்ணிக்கையில் இறந்தன. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த பறவைகளுக்கு ‘எச் 1, என் 1′ என்ற பறவை காய்ச்சல் பரவியிருந்தது […]

Loading

சிறுகதை

சிறுகதை … மந்தை வெளிச் சாலை ..! …. ராஜா செல்லமுத்து

நடிகர் சந்திரபாபுவின் கல்லறை அமைந்துள்ள குயிப்பிள் தீவுப் பகுதிக்கு வந்த மலரவனுக்கு அந்தக் கல்லறை பற்றிய ஆச்சரியம் மேலோங்கி இருந்தது. பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு முன்பு குயிப்பிள் தீவு அடையாறு நதி மற்றும் அதன் கிளை நதிகளால் சூழப்பட்ட பகுதியாக இருந்தது, கடல் அலைகளால் பாதிக்கப்பட்ட ஒரு கரையோர பகுதியாகவும் சதுப்பு நிலக் கால்வாய்களின் இடமாகவும் இருந்தது. இது இயற்கையாகவே ஒரு தீவாக இல்லை என்றாலும் நீரோட்டம் மிகுந்த ஒரு நிலப்பரப்பு. இந்தப் பகுதியின் மிக முக்கியமான வரலாற்று […]

Loading

செய்திகள்

இளம் இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பால புரஸ்கார் விருது: ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்

புதுடெல்லி, டிச. 26– வளர்ந்து வரும் இளம் இந்திய கிரிக்கெட் வீரரான 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். வீரம், கலை, கலாச்சாரம், சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு பிரதமரின் தேசிய சிறார் விருது (ராஷ்ட்ரிய பால புரஸ்கார்) விருது ஆண்டுதோறும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான விருதுக்கு 20 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறுவர்களுக்கான […]

Loading

செய்திகள்

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முற்றுகை: இடைநிலை ஆசிரியர்கள் கைது

சென்னை, டிச. 26– சம வேலைக்கு, சம ஊதியம் வழங்குவதாக திமுகவின் 311வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2009 மே 31ந்தேதி நியமிக்கப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. […]

Loading

செய்திகள்

தமிழக சட்டசபை ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது: கவர்னர் உரை நிகழ்த்துகிறார்

சென்னை,டிச. 26– ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டு புத்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 20ந் தேதி நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு இன்று தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் பேசுகையில், “2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் […]

Loading

செய்திகள்

உத்தரபிரதேசம் லக்னோவில் ரூ.230 கோடி செலவில் தேசிய நினைவுச் சின்ன அருங்காட்சியகம்:

பிரதமர் மோடி திறந்து வைத்தார் லக்னோ, டிச.26- உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் ரூ.230 கோடி செலவில் 65 ஏக்கர் பரப்பளவில் ராஷ்ட்ர பிரேர்ண ஸ்தல் என்ற பெயரில் தேசிய நினைவுச்சின்ன அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் 65 ஏக்கர் பரப்பளவில் ரூ.230 கோடி செலவில் ராஷ்ட்ர பிரேர்ண ஸ்தல் என்ற பெயரில் தேசிய நினைவிடமும், […]

Loading

செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்

சென்னை, டிச.26- புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டிசம்பர் 31-ந் தேதி(புதன்கிழமை) நள்ளிரவு ஓட்டல்கள், கடற்கரை, ரிசார்ட்டுகளில் உற்சாகம் களைகட்டும். புத்தாண்டுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கடற்கரை ரிசார்ட்டுகள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் […]

Loading