செய்திகள்

கரூர் பலி: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் 2-வது நாளாக தவெக நிர்வாகிகள் ஆஜர்

புதுடெல்லி, டிச. 30– கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் 2வது நாளாக இன்றும் ஆஜராகியுள்ளனர். டெல்லியில் நேற்று ஆஜரான தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் தலைமை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் 8 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நீடித்தது. கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் […]

Loading

செய்திகள்

சென்னை ரஷ்ய தூதர் வலேரி கோட்ஜேவுடன் பிரிக்ஸ் ஜெனரேஷன் குழுவினர் சந்திப்பு

இந்தியா தலைமையில் 2026 பிரிக்ஸ் பிளஸ் உச்சி மாநாடு சென்னை, டிச.30- சென்னையிலுள்ள ரஷ்ய தூதர் வலேரி கோட்ஜேவை, பிரிக்ஸ் ஜெனரேசன் குழுவின் நிறுவனர், தலைவர் ஆர்.முத்துக்குமார் தலைமையிலான குழுவினர் சந்தித்து, இந்தியா தலைமையில் 2026 பிரிக்ஸ் பிளஸ் உச்சி மாநாட்டில் மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்து ஆலோசித்தனர். மக்களிடையே ராஜதந்திர உறவு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பிரிக்ஸ் ஜெனரேஷன் அமைப்பின் உயர்மட்டக் குழுவினர், சென்னையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் தூதர் […]

Loading

செய்திகள்

வங்கதேச முன்னாள் பெண் பிரதமர் கலிதா ஜியா காலமானார்

டாக்கா, டிச. 30: வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவருக்கு வயது 80. இவர் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலிதா ஜியா இருதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக, கடந்த நவம்பர் மாதம் 23–ந்தேதி டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. எனினும் அவரது உடல்நிலை சீராகவில்லை. அவருக்கு சுவாசப் […]

Loading

செய்திகள்

மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பட்டங்கள் வழங்கினார்

புதுச்சேரி, டிச. 30: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, 2021 முதல் 2024-ம் ஆண்டு வரை படித்த பட்டதாரிகளுக்கு பட்டங்கள், பதக்கங்கள் வழங்கினார். அதன்படி 746 பேருக்கு முனைவர் பட்டமும், இளநிலை, முதுநிலை படிப்புகளில் முதலிடம் பிடித்த 759 மாணவர்களுக்கு தங்க பதக்கமும், மேலும் 89 […]

Loading

செய்திகள்

போதை மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது: எடப்பாடி குற்றச்சாட்டு

திருவள்ளூர், டிச. 30: தி.மு.க. ஆட்சியில் தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார். ’மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திருத்தணி தொகுதியில் எழுச்சியுரை ஆற்றினார். இதையடுத்து திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர் – ஊத்துகோட்டை சாலை புதிய பேருந்து நிலையம் அருகே திறந்தவெளி மைதானத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– ‘’அண்ணா திமுக கூட்டணி அடுத்தாண்டு […]

Loading

செய்திகள்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய ஸ்டாலின் : எடப்பாடி குற்றச்சாட்டு

திருத்தணி, டிச. 30: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி விட்டார் ஸ்டாலின் என்று எடப்பாடி குற்றஞ்சாட்டினார். எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று 178வது தொகுதியான திருத்தணியில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து திருத்தணி, சோளிங்கர் சாலை, வீரகநல்லூரில் உள்ள திறந்தவெளித் திடலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2500 ரூபாய் ஆதார விலை, ஒரு டன் கரும்புக்கு 4 ஆயிரம் […]

Loading

செய்திகள்

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தே தீரும்: திருப்பூர் தி.மு.க. மகளிரணி மாநாட்டில் ஸ்டாலின் உறுதி

திருப்பூர், டிச. 30: வரும் தேர்தலில் வெற்றி பெற்று பெண்களுக்கான திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவோம் என்று பல்லடத்தில் நேற்று நடந்த தி.மு.க. மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். திராவிட மாடல் அரசின் திட்டங்கள், சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார். சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதையொட்டி சமீபத்தில் இளைஞரணி மண்டல கூட்டத்தை திருவண்ணாமலையில் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பில் தி.மு.க. மகளிரணி மேற்கு மண்டல […]

Loading

செய்திகள்

தங்கம் சவரனுக்கு ரூ.3,360 குறைந்தது: வெள்ளி விலையும் சரிந்தது

சென்னை, டிச. 30: தொடர்ந்து ஏற்றம் கண்டு அதிர்ச்சி அளித்து வந்த தங்கம் விலை இன்று ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.3,360 குறைந்து விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. சர்​வ​தேச பொருளா​தார சூழல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது. அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் தங்​கம் விலை […]

Loading

செய்திகள்

டெல்லியில் அடர் பனிமூட்டம்: 118 விமானங்கள் ரத்து

புதுடெல்லி, டிச. 30: டெல்லியில் இன்று அடர் பனிமூட்டத்துக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில், 118 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக அடர் பனிமூட்டம் மற்றும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக டெல்லி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் இன்று பிற்பகல் வரை அடர் பனிமூட்டத்துக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதன் காரணமாக, டெல்லி சர்வதேச […]

Loading

செய்திகள்

உலக ‘ரேபிட்’ செஸ் தொடரில் வெண்கலம்: அர்ஜுன், ஹம்பிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, டிச. 30: உலக ‘ரேபிட்’ செஸ் தொடரில் வெண்கலம் வென்ற இந்தியாவின் அர்ஜுன், ஹம்பிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். கத்தார் தலைநகர் தோகாவில், உலக செஸ் கூட்டமைப்பு (‘பிடே’) சார்பில் உலக ‘ரேபிட்’, ‘பிளிட்ஸ்’ சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. முதலில் ‘ரேபிட்’ பிரிவு போட்டிகள் நடந்தன. பெண்கள் பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி (வயது 38), ஓபன் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி (வயது 22), வெண்கலம் கைப்பற்றினர். உலக ‘ரேபிட்’ பிரிவில் 5 […]

Loading