செய்திகள்

ஐ.ஐ.டி., ஹைதராபாத் மாணவருக்கு நெதர்லாந்து பங்குச்சந்தை நிறுவனத்தில் வேலை

ஹைதராபாத், ஜன. 3: தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனத்தில் இறுதி ஆண்டு கணினி அறிவியல் படிக்கும் எட்வர்ட் நாதன் வர்கீஸ், 21, என்ற மாணவருக்கு, ஆண்டுக்கு 2.50 கோடி ரூபாய் சம்பளத்துடன் நெதர்லாந்து நாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. ஆர்வம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உயர் கல்வியில் சேர மாணவர்களின் முதல் தேர்வாக இந்திய தொழில்நுட்ப நிறுவனம் எனப்படும் ஐ.ஐ.டி., உள்ளது. இதன் கிளை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதிலும் உள்ளது. ஹைதராபாதைச் […]

Loading

சினிமா செய்திகள்

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த்தின் 173-வது படம்: டைரக்டர் சிபி சக்கரவர்த்தி

சென்னை, ஜன. 3: கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த் நடிக்க திரைப்படம் தயாரிக்கிறார் அல்லவா? இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 173 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக ராஜ்கமல் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னர், இதற்கான அறிவிப்பு வெளியானது. அதில் சுந்தர்.சி, இயக்குனர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்படத்தை இயக்குவதில் இருந்து சுந்தர் சி விலகி விட்டார். சுந்தர் சி விலகலுக்கு […]

Loading

செய்திகள்

பிரேசிலில் லாரி மீது பஸ் மோதல்: 11 பேர் பரிதாப பலி , 7 பேர் காயம்

பிரேசிலியா, ஜன. 3: பிரேசிலில் லாரி மீது பஸ் மோதிய விபத்தில், 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரேசிலின் தெற்குப் பகுதியில், ரியோ கிராண்டேவில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த பஸ் ஒன்று நிலை தடுமாறி, அந்த வழியாக எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயமுற்றனர். விபத்து குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு […]

Loading

சிறுகதை

சிறுகதை … ஹபிபுல்லா சாலை…!

:- ராஜா செல்லமுத்து :- சென்னையை விட்டு வெளியூர் சென்றிருந்த செல்வபாரதி, நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை, ஹபிபுல்லா சாலையில் சென்று கொண்டிருந்தான், அவன் நினைவில் ஹபிபுல்லா சாலையின் வரலாறு நீண்டது. ‘ஹபிபுல்லா சாலை, சென்னை, தியாகராய நகரில் இருக்கும் முக்கியச் சாலை. சர் முகமது ஹபிபுல்லா என்ற முன்னாள் அரசியல்வாதி மற்றும் பிரிட்டிஷ் அரசின் நிர்வாகியின் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 1920 களில் சென்னை திட்டமிடப்பட்ட நகரமாக உருவாக்கப்பட்ட போது அப்போதைய மாகாண அரசாங்க […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் மின்னணு உற்பத்தி திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி, ஜன. 3: தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் ரூ.41 ஆயிரத்து 863 கோடி மதிப்புள்ள மின்னணு உற்பத்தி திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மின்னணு பொருட்கள் உற்பத்தி தொடர்பான ரூ.12 ஆயிரத்து 704 கோடி மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், ரூ.41 ஆயிரத்து 863 கோடி முதலீட்டுக்கு வழிவகுக்கும் 22 மின்னணு உற்பத்தி திட்டங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான […]

Loading

செய்திகள்

பாரதி கனவை நனவாக்குபவர் பிரதமர் மோடி: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேச்சு

சென்னை, ஜன. 3: பாரதியின் கனவை நனவாக்கு பவராக மோடி செயல்படுகிறார் என்றும், 2047-ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் உலகளவில் முதல் இடத்தை இந்தியா எட்டும் என்றும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே தலைமை தாங்கினார். புதிய நீதிக்கட்சி நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார். விழாவில், துணை […]

Loading

செய்திகள்

இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம், நல்ல முடிவு எடுப்போம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை, ஜன. 3: இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம், அவர்கள் பொறுமையாக இருந்தால் நல்ல முடிவு எடுப்போம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். சென்னை நந்தனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நிருபர்கள் ஆசிரியர்கள் போராட்டம் குறித்த கேள்விகளை சரமாரி கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:- போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களிடம் நானும், அதிகாரிகளும் கடந்த 7 நாட்களாக […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

ஆங்கிலேயரை அலறவிட்ட நாயகர்கள்

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஜனவரி 3-ம் தேதிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து வீரப்போர் புரிந்த தமிழகத்தின் இரண்டு பெரும் ஆளுமைகளான ‘வீரமங்கை’ வேலு நாச்சியார் (பிறப்பு: 1730) மற்றும் ‘பாஞ்சாலங்குறிச்சி சிங்கம்’ வீரபாண்டிய கட்டபொம்மன் (பிறப்பு: 1760) ஆகிய இருவரும் பிறந்தது இதே நாளில்தான்! அரசியல் அறிவு, தைரியம், தியாகம் – இவை இருவரின் பொதுப் பண்புகள்) ஆனால் ஆங்கிலேயரை எதிர்கொண்ட விதமும், இவர்களின் போர் முறைகளும் வெவ்வேறானவை.ஒரே எதிரி… […]

Loading

செய்திகள்

அரசுப்பள்ளிகளில் தினமும் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம் ராஜஸ்தான் அரசு உத்தரவு

ஜெயப்பூர், ஜன. 3: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் தினமும், இனி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு பல்வேறு தரப்பினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நடப்பு நிகழ்வுகள் குறித்து தெரிந்து கொள்ளவும், வாசிப்பு பழக்கத்தை வலுப்படுத்தவும், மாணவர்களிடையே மொழித்திறனை மேம்படுத்தவும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், தினசரி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிக்க வேண்டும் என்ற நடைமுறையை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு […]

Loading

Uncategorized செய்திகள்

அண்ணா தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தார்

சென்னை, ஜன. 3: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் அண்ணா தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி பிரபாகர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஜே.சி.டி. பிரபாகர். இவர் 1980, 2011-ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் வென்று எம்.எல்.ஏ. ஆனார். அதிலும் 2011-ம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் மறைந்த பேராசிரியர் அன்பழகனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அண்ணா தி.மு.க.வில் அமைப்பு செயலாளராகவும், […]

Loading