செய்திகள்

பா.ம.க. இருக்கும் அணியில் இடம் பெறமாட்டோம்:

திருமாவளவன் உறுதியான முடிவு சென்னை, ஜன. 25– பா.ம.க. இருக்கும் அணியில் இடம் பெறமாட்டோம் என்கிற முடிவில் உறுதியாக இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:– வரும் தமிழக சட்டசபை தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 3 இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்க இயலாத நிலை உள்ளது. மேலும் ஏற்கனவே கூட்டணிக்குள் அதிகம் பேர் இருப்பதால் இரண்டு இலக்க அளவில் தொகுதிகளை […]

Loading

செய்திகள்

தேசிய வாக்காளர் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, ஜன. 25– தேசிய வாக்காளர் தின வாழ்த்துக்கள். இந்திய தேர்தல் ஆணையத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- தேசிய வாக்காளர் தின வாழ்த்துக்கள். இந்த நாள் நமது நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மீதான நமது நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துவதாகும். நமது ஜனநாயக செயல்முறைகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்காக இந்திய தேர்தல் ஆணையத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது பாராட்டுகள்.வாக்காளராக இருப்பது என்பது அரசியலமைப்புச் சலுகை […]

Loading

செய்திகள்

ஆம்னி பஸ்கள் மோதி விபத்து: 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி

மதுரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் மதுரை, ஜன. 25– மதுரை அருகே கொட்டாம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஆம்னி பஸ் மீது மற்றொரு ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் இருந்து நேற்றிரவு நெல்லைக்கு ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை மதுரை கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி பகுதியில் […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டை சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிப்பு

சென்னை, ஜன. 25– தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் 3 பேருக்கு சிறப்புமிக்க ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினம் முன்னிட்டு சீரமைப்பில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வீரச்செயல் புரிந்த 121 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 89 பேருக்கு ஜனாதிபதி பதக்கம், 664 பேருக்கு சிறப்பான பணிக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதக்கம், செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை கண்காணிப்பாளர் குமரவேலு, துணை […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: 27-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

புதுடெல்லி, ஜன.25- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு வருகிற 27ந்தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. 2025–2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி முதல் கட்ட கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் 13ந்தேதி வரை நடக்கிறது. 2ம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் மாதம் 9ந்தேதி முதல் ஏப்ரல் 2–ந்தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தொடரையொட்டி 28ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். […]

Loading

செய்திகள்

குடியரசு தினத்தையொட்டி 44 காவல்துறை அதிகாரிகளுக்கு விருது: ஸ்டாலின் உத்தரவு

சென்னை, ஜன. 25– 2026ம் ஆண்டு குடியரசுதினத்தை முன்னிட்டு 44 காவல்துறைஅதிகாரிகள்–பணியாளர்களுக்கு குடியரசு தின பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்க பிரிவில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் காவல்துறை அதிகாரிகள்–பணியாளர்களுக்கு 2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பணிப் பதக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு […]

Loading

செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்: தர்மர் எம்.பி. மீண்டும் அண்ணா தி.மு.க.வில் சேர்ந்தார்

சென்னை, ஜன.25- அண்ணா தி.மு.க. இணைப்பு ஒன்று கூடாததால் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தார். இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி. தர்மர் அ.தி.மு.க.வில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். அவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தபோதும், அவர் அண்ணா தி.மு.க.வில் இருந்து நீக்கப்படவில்லை. இந்தநிலையில், அண்ணா தி.மு.க. […]

Loading

செய்திகள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை

சென்னை, ஜன. 25– குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட முன்தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப் படை குண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் குழு மற்றும் அரசுக் ரயில்வே காவல் ஆகியவற்றின் இணைந்த முயற்சியுடன் தீவிர கூட்டு (எதிர்-சபோட்டாஜ்) சோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்த ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கை, நிலையத்தின் அனைத்து முக்கிய […]

Loading

செய்திகள்

சென்னை எழும்பூரில் தாளமுத்து–நடராஜன் சிலைகளை ஸ்டாலின் திறந்து வைத்தார்

மூலக்கொத்தளத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி சென்னை, ஜன. 25– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சென்னை, மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரின் நினைவிடத்தில் வீர வணக்கம் செலுத்தினார். மேலும், சென்னை, எழும்பூர் தாளமுத்து – நடராசன் மாளிகை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவாளர்கள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது மார்பளவு திருவுருவச்சிலைகளை திறந்துவைத்தார். இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்று உயிர் நீத்த தோழர்கள் நடராசன் மற்றும் தாளமுத்து […]

Loading

செய்திகள்

கால்பந்து விளையாடியபோது உயிரிழந்த கல்லூரி மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி:

ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜூன், 25– ஓசூரை சேர்ந்த கல்லூரி மாணவி கால்பந்து விளையாடியபோது உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், சதாசிவபுரம் கிராமம், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கணினி அறிவியல் முதலாமாண்டு பயின்று வந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டையைச் சேர்ந்த திவ்யதர்ஷினி (17) என்பவர் 23.1.2026 அன்று பிற்பகல் சக மாணவியருடன் கால்பந்து விளையாடிக்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக மயங்கி […]

Loading