செய்திகள்

திருப்போரூர் இள்ளலூர் ஊராட்சி பகுதி தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருப்போரூர், ஜன. 4: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இள்ளலூர் முதல் நிலை ஊராட்சியில் தி.மு.க.வின் காஞ்சி வடக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட பாகம் எண் 127, 128, 129ல் இள்ளலூர், ஈச்சங்காடு, பெரியார் நகர் ஆகிய பகுதிகளுக்கான ‘என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி’ என்ற தலைப்பில் மாபெரும் தெருமுனை பொதுக்கூட்டம், கிளைக்கழக செயலாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் இள்ளலூர் கிளைக் கழகச் செயலாளர் எஸ்.ஜெயசேகரன் (எ)ராஜா ஏற்பட்டில் நடைபெற்றது. இதில் […]

Loading

செய்திகள்

வரி வருவாயைப் பெருக்குவதில் கவனம் செலுத்துங்கள்: ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமே ப.சிதம்பரம் அறிக்கை

சென்னை, ஜன. 4: சொந்த வரி வருவாயை பெருக்குவதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் முழுவிவரங்கள் வெளிவந்துள்ளன. இந்தத் திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்பது தெளிவு; ஆனால் நிதி மேலாண்மை செம்மையாக இருந்தால் ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமே. தமிழக அரசின் சொந்த வரி வருவாயில் 21–22% ஓய்வூதியத்திற்குச் செலவாகும் என்பது கணிப்பு. சொந்த […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

டிஜிட்டல் யுகத்தில் நியூட்டன் உயிர்…

1643 ஜனவரி 4 (ஜூலியன் நாட்காட்டி) அன்று பிறந்த சர் ஐசக் நியூட்டன், நவீன அறிவியலின் அடித்தளத்தை அமைத்த மாபெரும் விஞ்ஞானி. அவரது கண்டுபிடிப்புகள் இல்லையெனில் இன்றைய அறிவியல், தொழில்நுட்ப உலகமே உருவாகியிருக்காது என்றே கூறலாம். மனித அறிவு இயற்கையின் சட்டங்களை புரிந்து கொண்டு உலகை மாற்ற முடியும் என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம் ஐசக் நியூட்டனின் முக்கிய கண்டுபிடிப்புகள், அவை: இயக்க விதிகள் (Three Laws of Motion) – வாகனங்கள், இயந்திரங்கள், ராக்கெட்டுகள், விமானங்கள் […]

Loading

செய்திகள்

வெனிசுலா இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம்

கராகஸ், ஜன. 4: வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். நாடு கடத்தப்பட்ட அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்காவின் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக, டிரம்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாழ்த்து தெரிவித்தார். கராகஸ் – தென் அமெரிக்காவில் உள்ள நாடு வெனிசுலா. அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பகை நிலவி வருகிறது. வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு […]

Loading

செய்திகள்

வேலூர் கருங்காலி ஊராட்சியில் தார் சாலை அமைக்கும் பணிகள்: கண்காணிப்பு அலுவலர் உமா ஆய்வு

வேலூர், ஜன. 4: வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அரசு கூடுதல் செயலாளர் உமா அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருங்காலி ஊராட்சியில் நபார்டு திட்டத்தில் ரூ.57,26,000 மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு, சாலையின் நீளம் அகலம் மற்றும் உயரம் ஆகியவை மதிப்பீட்டில் உள்ளதா என அளந்து பார்த்து ஆய்வு செய்தார். கண்காணிப்பு அலுவலர் ச. உமா அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், வேலூர் மாநகராட்சி, திருவலம் பகுதிகளில் சாலைபணிகள் மற்றும் […]

Loading

செய்திகள்

சித்த மருத்துவ மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

சென்னை, ஜன. 4: புற்றுநோய் போன்றவற்றுக்கும் சித்த மருத்துவ முறையில் தீர்வு இருப்பதால், அவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் என ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ‘குணப்படுத்த முடியாததாக கருதப்படும் நோய்களுக்கான தீர்வுகளைக் கண்டறிய சித்த மருத்துவத்தில் அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொள்ள இளம் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்’ என்று துணை ஜனாதிபதி கூறினார். சித்த மருத்துவத்தின் தந்தை என போற்றப்படும் அகத்தியரின் பிறந்த தினத்தையொட்டி ஆண்டுதோறும் சித்தா தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், மத்திய ஆயுஷ் […]

Loading

செய்திகள்

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அண்ணா தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு 9-ந் தேதி நேர்காணல்

சென்னை, ஜன. 4: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட அண்ணா தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு வருகிற 9ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நேர்காணல் நடக்கிறது. இது தொடர்பாக அண்ணா தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபைத்தேர்தல்களில், அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி, விருப்ப மனு அளித்துள்ளவர்களுடனான நேர்காணல், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகம் […]

Loading

செய்திகள்

பிரிமியம் செலுத்தாத காலாவதியான எல்ஐசி பாலிசிகளை புதுப்பிக்கலாம்

புதுடெல்லி, ஜன.4– இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிப்பதற்கான இரு மாத சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், தனிநபர் காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிப்பதற்காக 2 மாத கால சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. 2026ம் ஆண்டு ஜனவரி 1 தொடங்கிய இந்த பாலிசி புதுப்பிப்பு திட்டம் வரும் மார்ச் 2ம் தேதி வரையில் […]

Loading

செய்திகள்

வேலூர் ஸ்ரீபுரம் சக்தி அம்மா 50-வது ஜெயந்தி விழா: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்புரை

வேலூர், ஜன. 4: ஸ்ரீபுரத்தை உருவாக்கி, தங்ககோயிலை உலகிற்கு வழங்கிய ஸ்ரீ சக்தி அம்மாவின் 50–வது ஜெயந்தி விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த பொன்விழா ஜெயந்தியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சக்தி அம்மாவுக்கு மறியாதை செலுத்தி சிறப்புரை ஆற்றினார். அரியூர் மலைக்கோடியில், ஸ்ரீ சக்தி அம்மா தன் தவ வலிமையால் நாராயணி பீடத்தை ஏற்படுத்தி நாராயணிக்கு கோயில் கட்டி சிறப்பித்தார். இந்த நிலையில், தெய்வத்தின் கட்டளையினால் சக்தி அம்மா தெய்வத்தின் […]

Loading

செய்திகள் விழாக்கள்

திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா: ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் துவக்கினார்

தஞ்சாவூர், ஜன. 4: திரு​வை​யாறில் தியாக​ராஜ சுவாமிகளின் 179வது ஆராதனை விழாவினை சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமிகள் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்தார். இங்கு அவரது சமாதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பகுலபஞ்சமி தினத்தில் தியாகராஜசுவாமிக்கு ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவுக்கு தியாகர […]

Loading