செய்திகள்

ஆன்–லைன் முதலீடு: ஈரோடு விவசாயிடம் ரூ.42 லட்சம் மோசடி

ஈரோடு, ஜன. 7– ஈரோட்டில் விவசாயிடம் ஆன்–லைன் மூலம் ரூ. 42 லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் செம்பூத்தாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி (44 வயது) ஒருவர், வாட்ஸ்அப் மூலம் தன்னை தொடர்பு கொண்ட பெண் ஒருவரின் ஆலோசனையின் பேரில், போலி பங்குச்சந்தை செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அதன் மூலம் தனக்கு பெரும் லாபம் கிடைக்கும் என நம்பி, அவர் சேமித்து வைத்திருந்த ரூ.42.25 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். […]

Loading

செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட யாரையும் அணுகி ஏமாற வேண்டாம்

எடப்பாடி எச்சரிக்கை சென்னை, ஜன.7– அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு செய்துள்ளவர்கள், யாரிடமும் ‘சீட்’ பெற வாய்ப்பு பெற்றுத்தர அணுகி யாரும் ஏமாற வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லோசியோடும்; கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கோடானு கோடி தொண்டர்களின் ஒத்துழைப்போடும், […]

Loading

செய்திகள்

இது வெற்றிக் கூட்டணி: எடப்பாடி – அன்புமணி கூட்டாக பேட்டி

அண்ணா தி.மு.க. – பா.ம.க. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து சென்னை, ஜன.7– சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காலை சந்தித்தார். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர். இதையடுத்து கூட்டணி தொடர்பாக அண்ணா தி.மு.க. – பா.ம.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ம.க.வுக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் ஒன்றையும் கொடுக்க அண்ணா தி.மு.க தலைமை சம்மதம் என […]

Loading

செய்திகள்

ஈரானுக்கு பயணிக்க வேண்டாம்: இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

புதுடெல்லி, ஜன. 6: ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், கமேனி தலையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த மாத இறுதியில் தொடங்கிய போராட்டங்கள் 8-வது நாளை எட்டியுள்ளது. டெஹ்ரான் மற்றும் இஸ்பஹான், ஷிராஸ், மஷ்ஹத் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் பரவியுள்ளன. போலீசாருக்கும் […]

Loading

செய்திகள்

சென்னை போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சென்னை, ஜன. 6: திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.65,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2022ம் ஆண்டு அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 15 வயது (2022) சிறுமி காணாமல் போனதாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை என்ற பிரிவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

அன்னை தெரசாவின் வருகை

1929ஆம் ஆண்டு. இளம் வயதிலேயே துறவறப் பாதையைத் தேர்ந்தெடுத்த ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற இளம்பெண், தன் வாழ்க்கையின் மிகப் பெரிய பயணத்தைத் தொடங்கினார். ஐரோப்பாவின் குளிர்ந்த நிலங்களிலிருந்து, வெப்பமும் வறுமையும் கலந்த இந்தியா நோக்கி அவர் வந்த நாள், மனிதநேய வரலாற்றில் மறக்க முடியாத தருணமாக மாறியது. அவர்தான் அன்னை தெரசா. தெரசா இந்திய மண்ணில் கொல்கத்தாவில் (1929 ஜனவரி 6 ந்தேதி ) காலடி வைத்த அந்த நாளே இன்று. அவர் வாழ்நாள் முழுவதும் […]

Loading

செய்திகள்

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு U/A சான்றிதழ்

சென்னை, ஜன. 6: ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் 9ந் தேதி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் நேற்றுவரை தணிக்கைக் குழு, இப்படத்திற்கு சான்றிதழ் வழங்கவில்லை. ஆனால் U/A சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கிறது. (12 வயதுக்குட்பட்ட சிறுவர் – சிறுமிகள் பெற்றோர்களோடு தான் பார்க்க அனுமதி) தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த இழுபறியால், திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு வெய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. படம் […]

Loading

செய்திகள்

21 வகை விளையாட்டுக்கான பயிற்றுனர் பணியிடங்கள் விண்ணப்பம் பெறும் இணையதளம்: உதயநிதி துவக்கினார்

சென்னை, ஜன. 6: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வில்வித்தை, தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கனோயிங் மற்றும் கயாகிங், சைக்கிளிங், வாள்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், வளைகோல் பந்து, ஜுடோ, கபடி, நீச்சல், நீச்சல் டைவிங், மேசைப்பந்து, டேக்வாண்டோ, டென்னிஸ், கையுந்துபந்து, பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகளுக்கான பயிற்றுநர் பணியிடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயிற்றுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான இணையதள விண்ணப்ப பயன்பாட்டினை துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் […]

Loading

செய்திகள்

‘‘கிருமித் தொற்றால் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, மலச்சிக்கல், வயிறு வீக்கம், வாயு பிடிப்பு நீங்க சிறந்தது பழைய சோறு’’: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஜன. 6: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில் “பழைய சோறு குறித்த அறிவியல் கருத்தரங்கம்’’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ‘‘நான் சிறுவயதில் இருந்தே வாரத்திற்கு 2 முறை பழைய சோறு சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றி வருகிறேன். இப்போது இந்த கருத்தரங்கத்தின் மூலம் பழைய […]

Loading

செய்திகள்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது

சென்னை, ஜன. 6: தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகி வலுப் பெற்றுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரத்துடன் இருக்கும். ஆனால் இம்முறை டிசம்பரில் வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் பொழியவில்லை. கடும் பனி நிறைந்த மாதமாகவே டிசம்பர் இருந்தது. இந்த நிலையில் […]

Loading